சினிமா மோகத்தால்... சூப்பர் வாழ்க்கையை இழந்து அவதிப்பட்டு வரும் நடிகை பற்றிய கிசுகிசு தான் இது..
சினிமா மோகத்தில் சிறகடித்துக் கொண்டிருந்த நடிகை ஒருவர், திருமண வயதை எட்டியதை தொடர்ந்து அவருடைய பெற்றோர் நடிகையின் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போலவே, அமெரிக்க மாப்பிள்ளை ஒருவரை பார்த்து அம்மணிக்கு அமோகமாக திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.
இந்த பந்தா பண்ணும் பேரழகு நடிகைக்கு கிடைத்த மாப்பிள்ளையோ குடும்பத்துக்கு ஏற்ற சொக்க தங்கம். நடிகையை தங்க தட்டில் வைத்து தாங்கி பார்த்துக் கொட்டினார். எனினும் திடீரென நடிகைக்கு மீண்டும் சினிமா மோகம் துளிவிடவே, கட்டுக்கோப்பான குடும்பத்தை சேர்ந்த அந்த மாப்பிள்ளை பையன் நடிப்பு நம்ப குடும்பத்துக்கு செட் ஆகாது என தடை போட்டுள்ளார்.
சல்வார் அணிந்த சொர்க்கமே... சம்யுக்தாவின் கியூட் கேலரி!
இங்கு தான் வெடித்தது பிரச்சனை... ஏதேதோ பொய்களைச் சொல்லி, பக்கம் பக்கமா டயலாக் பேசி சென்னை செல்வதாக சொல்லி இருக்கு பொண்ணு. அப்போது நடிகை கர்ப்பமாக வேற இருந்ததால் மனைவியை பிரிய மனம் இல்லாவிட்டாலும், அவரின் ஆசைக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை செல்ல சம்மதித்துள்ளார் மாப்பிள்ளை பையன். விட்டதே போதும் என சென்னைக்கு வந்த நடிகை முதல் வேலையாக தன்னுடைய கர்ப்பத்தை கலைத்து வாழ்க்கையை பாழாக்கி கொண்டார்.
ஒரு மாதத்தில் வருகிறேன் என சொன்ன இவர், பின்னர் கணவரிடம் குழந்தையை கலைத்த விஷயத்தையும், இனி உன்னுடன் வாழ எனக்கு இஷ்டமில்லை நான் திரைப்படங்களில் நடிக்கப் போகிறேன் என ஷாக் கொடுத்துள்ளார். அப்பா தவறிவிட்ட நிலையில், அம்மா அரவணைப்பில் இருந்த அந்த நடிகை இனி தன்னுடைய கணவர் தொந்தரவே செய்யக்கூடாது என விவாகரத்தையும் கேட்டு நீதிமன்றம் வரை சென்றார்.
விவாகரத்து கொடுக்க முதலில் தயங்கிய கணவர், இவர் அடுத்தடுத்து ஒரு சில பொய்களைக் கூறி கோடிக்கணக்கில் அமௌண்டை அபேஸ் பண்ண நினைத்ததால், சுதாரித்துக் கொண்டு... நடிகை கொடுத்த தொல்லை எல்லாம் தாண்டி, ஒரு வழியாக விவாகரத்தையும் கொடுத்துவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றார்.
'தி கேரளா ஸ்டோரி' பட விவகாரம்! மேற்கு வங்கம் அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!
சினிமா மோகத்தில் ஓவராக ஆடிய நடிகை, கணவரை விட்டு பிரிந்து திரையுலகிலும் ஜெயித்தாரா என்றால் அதுவும் இல்லை. ஏதோ கிடைக்கிற துண்டு கதாபாத்திரத்தில் மட்டுமே அவ்வப்போது தலைகாட்டி வருகிறாராம். வயசு ஏறிடுச்சினாலே சினிமாவுல மவுசு போயிடும்னு தெரியாம... நல்ல வாழ்க்கையை நாசமாக்கிக்கிட்டு, பட வாய்ப்பும் பெரிதாக கிடைக்காமல் அசிங்கப்பட்டு நிற்கிறாராம்.