சென்னை மக்களே.. இசை வெள்ளத்தில் மூழ்க தயாரா? சித் ஸ்ரீராமின் "நீ சிங்கம் தான்" கான்செர்ட் - டிக்கெட் வேணுமா?

By Ansgar RFirst Published Jun 18, 2024, 8:30 PM IST
Highlights

Sid Sriram Concert : சென்னையில் இன்னும் சில தினங்களில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை கச்சேரி நடக்கவுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் காணலாம். 

சென்னையில் பிறந்திருந்தாலும் சிறு வயதிலேயே கலிபோர்னியா மாகாணத்திற்கு குடிபெயர்ந்து, இளம் வயது முதல் வெளிநாட்டவராகவே வளர்ந்து வந்தவர் தான் சித் ஸ்ரீராம். சிறுவயது முதலே இவர் இசையை முறையாக கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஏ.ஆர் ரகுமான் இசையில், மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான "கடல்" என்கின்ற திரைப்படத்தில் ஒலித்த "அடியே" என்கின்ற பாடலை பாடி தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.

இன்றளவும் தமிழ் சினிமாவில் நல்ல பல பாடல்களை பாடிவரும் சித் ஸ்ரீராம் அவர்களுடைய இசை கச்சேரி என்றால் பலருக்கும் பிடிக்கும். இந்த சூழலில் விரைவில் சென்னையில் சித் ஸ்ரீராம் ஒரு இசைக்கச்சேரி நடத்தவிருக்கிறார். "Fever Live" இந்த இசை கச்சேரியை தயாரித்து வழங்க உள்ளது. இன்னும் நான்கு நாட்களில், சென்னையில் உள்ள YMCA மைதானத்தில், "நீ சிங்கம் தான்" என்கின்ற தலைப்பில் சித் ஸ்ரீராம் அந்த இசை கச்சேரியில் கலந்துகொள்வார். ஜூன் மாதம் 22ம் தேதி மாலை 6 மணிக்கு இது நடைபெறவுள்ளது.

Latest Videos

சிற்பங்கள்.. ஓவியங்கள்.. சுற்றி தோட்டம்.. கேரளா ஸ்டைல் பிரம்மாண்ட வீடு.. மீனாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? 

இது குறித்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் பிறந்து வளர்ந்த சித் ஸ்ரீராம், மீண்டும் தனது சொந்த மண்ணில் இசை கச்சேரி ஒன்றை நடத்தவிருக்கிறார். அண்மையில் அவர் "Coachella Valley Music and Arts Festival 2024ல்" கலந்து கொண்டு அசத்தியதை போலவே நடக்கவிருக்கும் இந்த இசை கச்சேரியில் அவர் அசத்த உள்ளதாக கூறியுள்ளது. 

மதிப்பிற்குரிய இசைப்புயல் ஆர். ரகுமான் அவர்களே பலமுறை வியந்து பாராட்டிய ஒரு மாபெரும் பாடகர் தான் சித் ஸ்ரீராம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நேர்த்தியாக பாடும் திறன் கொண்ட ஒரு எல்லையற்ற கலைஞர் தான் ஸ்ரீ ராம் என்றும் அந்த நிறுவனம் புகழாரம் சூட்டியிருக்கிறது. 

மேலும் இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் இதற்கான டிக்கெட்டுகள் தற்பொழுது விற்பனைக்கு வந்திருக்கிறது. Paytm Insider மற்றும் "Book My Show" உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகளை மக்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

Fever Live நிறுவனத்தை பொருத்தவரை, பிரபல Fever FM (91.9) நிறுவனத்தின் ஒரு சார்பு நிறுவனமாகும். பல மறக்க முடியாத இசைக்கச்சேரிகளையும், நேரலை நிகழ்ச்சிகளையும் நடத்திவரும் புகழ்பெற்ற நிறுவனம் எதுவென்பது குறிப்பிடப்பட்டது.

சுடரை பார்த்து பதறி போன இந்து! அதிர்ச்சியில் மனோகரி.. நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் அப்டேட்!

click me!