அடேங்கப்பா! ஒரு படத்துக்கே இவ்ளோவா! கங்கனா ரனாவத், ஆலியா பட்டை முந்திய தீபிகா படுகோன்!

By SG Balan  |  First Published Jun 18, 2024, 6:16 PM IST

Deepika Padukone Highest paid actress in 2024: தீபிகா ஒரு திரைப்படத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அவரைத் தொடர்ந்து நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.27 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.


பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் 2024ஆம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார். கல்கி 2898 AD படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள இவர், ஆலியா பட், கங்கனா ரணாவத், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தென்னிந்திய நடிகைகள் யாரும் இல்லை. ஐஎம்டிபியின் உதவியுடன் ஃபோர்ப்ஸ் தொகுத்த இந்தப் பட்டியலில், 2024ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக தீபிகா படுகோன் உருவெடுத்தார்.

Tap to resize

Latest Videos

தீபிகா ஒரு திரைப்படத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் பெறுகிறார். அவரைத் தொடர்ந்து நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரணாவத் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.27 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஒரு படத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை வாங்கும் பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தில் உள்ளார்.

 

கத்ரீனா கைஃப் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஒரு படத்திற்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை கேட்கும் ஆலியா பட் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

கரீனா கபூர் ஒரு படத்திற்கு ரூ.8 கோடி முதல் ரூ.18 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூர் ஒரு படத்துக்கு ரூ.7 கோடி முதல் ரூ.15 கோடி வரை கேட்கிறாராம். வித்யா பாலன் ஒரு படத்திற்கு 8 கோடி முதல் 14 கோடி வரை சம்பளம் வாங்குவதாகச் சொல்லப்படுகிறது. அனுஷ்கா ஷர்மா ஒரு படத்திற்கு ரூ 8 கோடி முதல் ரூ 12 கோடி வரை சம்பளம் பெறுகிறார். ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு ரூ 10 கோடி கேட்கிறார்.

இப்போது தீபிகா மற்றும் ஆலியா வசம் சில பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் கல்கி 2898 கிபி படத்தில் தீபிகாவும் நடிக்கிறார். ஆலியா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாக உள்ள முக்கிய படங்களில் ஒன்று ஜிக்ரா. ரன்பீர் கபூர் மற்றும் விக்கி கவுஷலுடன் லவ் அண்ட் வார் படத்திலும் நடிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலியுடன் மற்றொரு படத்திலும் ஆலியா ஒப்பந்தமாகியுள்ளார்.

click me!