திருமணத்திற்கு முன் நடந்த பெரும் சோகம்; புரியாமல் பேசும் Netizens - எமோஷனலான ரெடின் கிங்ஸ்லி மனைவி!

Ansgar R |  
Published : Jun 18, 2024, 04:38 PM ISTUpdated : Jun 18, 2024, 05:55 PM IST
திருமணத்திற்கு முன் நடந்த பெரும் சோகம்;  புரியாமல் பேசும் Netizens - எமோஷனலான ரெடின் கிங்ஸ்லி மனைவி!

சுருக்கம்

Actress Sangeetha : கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி அவர்களுக்கும், பிரபல நடிகை சங்கீதாவிற்கு திருமணம் நடந்து முடிந்தது.

தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக பயணித்து வந்தாலும், கடந்த 2018ம் ஆண்டு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வெளியான, நயன்தாராவின் "கோலமாவு கோகிலா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை நடிகராக தொடங்கியவர் தான் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. 

தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி பிரபல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சங்கீதாவை அவர் திருமணம் செய்து கொண்டார். அப்போது நடிகர் ரெடின் கிங்ஸ்லிவிற்கு வயது 45 என்பதும் நினைவுகூரத்தக்கது.  

வெறித்தன விஜய்சேதுபதி Is back - 2024ல் தெலுங்கு மாநிலத்தில் அதிக வசூல் செய்த மகாராஜா! எத்தனை கோடி தெரியுமா?

நடிகை சங்கீதாவை பொறுத்தவரை, தளபதி விஜயின் மாஸ்டர் உள்ளிட்ட பல நல்ல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார். ரெடினை திருமணம் செய்து பல சர்ச்சைகளை சந்தித்த அவர், தனது சொந்த வாழ்க்கை குறித்து அண்மையில் பங்கேற்ற ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். நடிகை சங்கீதா பேசும்போது, "திருமணத்திற்கு முன்னதாக ஒரு நாள், நானும் எனது தாயும் வெளியில் செல்ல கிளம்பிக்கொண்டிருதோம். அப்போது என் அப்பாவிற்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் எங்களை பயமுறுத்தக் கூடாது என்பதற்காக அதை எங்களிடம் அவர் கூறவில்லை". 

"கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, வீட்டு வாசலுக்கு வந்து எங்களை வழி அனுப்பினார். ஆனால் அபசகுனமாக நாங்கள் சென்ற அந்த கார் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை செய்ய, மீண்டும் நாங்கள் வீட்டுக்கு வந்துவிட்டோம். சிறிது நேரம் கழித்து வேறொரு காரில் வெளியே சென்றோம். அப்போது கூட அவர் எங்களிடம் எதுவும் கூறவில்லை". 

"இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் அவருக்கு நெஞ்சுவலி அதிகமாகி அவர் இறந்து விட்டார். அவருடைய இழப்பை இன்று வரை என்னால் ஈடு செய்ய இயலவில்லை. திருமணத்திற்கு அவர் இல்லாதது எனக்கு மிகுந்த மனவேதனையாக இருந்தது. இப்படி ஒரு சூழலில் தான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் எனக்கு திருமணம் ஆனதற்கு பிறகு பலரும் பலவாறு என்னைப்பற்றி தவறாக பேசுகின்றனர்". 

"எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாக சிலர் கூறுகின்றனர், எனக்கு மகள் இருப்பதாகவும் வதந்தி கிளப்பினார்கள். அது என் சகோதரரின் மகள் என்று நான் கூறியும், இன்றும் பலர் என்னை பற்றி தவறாக பேசுகிறார்கள். காசுக்காக திருமணம் செய்துகொண்டேன் என்கிறார்கள், என்று மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார்.

சினிமாவை மிஞ்சிய உமாபதி - ஐஸ்வர்யா ஜோடி! வெட்டிங் ரிசப்ஷனில் பட்டைய கிளப்பிய டான்ஸ்.. வைரல் போட்டோஸ்!

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது