ரஜினியின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்ட வட மாநில இளைஞர் ஒருவர் அவரை போலவே படு ஸ்டைலாக டீ போடுகிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் ஒருவர். 1970களில் அபூர்வ ராகங்கள் மூலம் அறிமுகமான ரஜினி சில ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறினார்.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராகவே ரஜினி இருந்து வருகிறார். இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். .தற்போது 71 வயதாகும் ரஜினி, இன்றும் அதே துடிப்பு, ஸ்டைலுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
மேலும் பாக்ஸ் ஆபிஸ் கிங், ரெக்கார்டு மேக்கராகவும் ரஜினி இருக்கிறார். இதன் காரணமாகவே ரஜினிகாந்திற்கு அதிக சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வருகின்றனர். தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக நடிகர் ரஜினிகாந்த் மாறி உள்ளார்.
ரஜினியின் தனித்துவமே அவரின் ஸ்டைல் தான். அவரின் ஸ்டைலை பலரும் பின்பற்றி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தனது ஸ்டைல் மூலம் சாமானிய மக்களையும் ஈர்த்துள்ளார். அதனை நிரூபிக்கும் விதமாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினியின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்ட வட மாநில இளைஞர் ஒருவர் அவரை போலவே படு ஸ்டைலாக டீ போடுகிறார். அந்த வீடியோவில் ஒரு பெரிய பாத்திரத்தில் இருக்கும் டீயை மற்றொரு டீ கேனுக்கு வடிகட்டுகிறார். பின்னர் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரஜினியை போலவே ஸ்டைலாக எடுத்து அதில் டீயை ஊற்றி அங்கிருப்பவர்களுக்கு கொடுக்கிறார்.
an inspiration to common man . A fan from North India
— Suresh Balaji (@surbalu)
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ | | | | | | pic.twitter.com/Fy3j0cb0H5
கூலிங் அணிந்திருக்கும் அவர், சட்டையில் ஒரு கூலிங் கிளாஸை மாட்டி இருக்கிறார். இடுப்பிலும் ரஜினியை போலவே ஸ்டைலாக துண்டை கட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தில் ரஜினி அடுத்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.