Latest Videos

விஜய் மல்லையாவின் மகனுக்கு இந்த வாரம் லண்டனில் திருமணம்.. மணமகள் யார் தெரியுமா?

By Ramya sFirst Published Jun 18, 2024, 11:11 AM IST
Highlights

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது காதலி ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்யவுள்ளார்.

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது காதலி ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்யவுள்ளார். லண்டனில் நடைபெற உள்ள திருமண விழாவில் சித்தார்த்தா தனது நீண்ட நாள் ஜாஸ்மினை லண்டனில்  திருமணம் செய்து கொள்கிறார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தார்தா, திருமண வாரம் தொடங்கிவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜாஸ்மினுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sid (@sidmallya)

 

சித்தார்த்தா - ஜாஸ்மின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த ஆண்டு சித்தார்த்தா ஜாஸ்மினுக்கு புரோபஸ் செய்திருந்தார். 

அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற Halloween 2023 விழாவில் சித்தார்த்தா - ஜாஸ்மின் நிச்சயதார்த்த விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் விஜய் மல்லையா தனது காதலிக்கு தனித்துவமான முறையில் புரோபஸ் செய்தார்.. அவர்களின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது.

நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மந்திரவாதி உடை அணிந்திருக்கும் ஜாஸ்மினுக்கு சித்தார்த்தா மண்டியிட்டு தனது காதலை சொல்வதையும், ஜாஸ்மின் தனது நிச்சயதார்த்த மோதிரத்தைக் காட்டும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார்...

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த சித்தார்த்தா. லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வளர்ந்தார். அவர் வெலிங்டன் கல்லூரி மற்றும் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார், பின்னர் ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமாவில் நடிப்பு பயின்றார்..சித்தார்த் மல்லையா ஒரு நடிகரும் மாடலும் ஆவார். 

நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சித்தார்த்தா ஒரு மாடலாகவும் நடிகராகவும் பணியாற்றத் தொடங்கினார். அவர் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான பிரம்மன் நாமன் உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். ஆன்லைன் வீடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், கின்னஸின் சந்தைப்படுத்தல் மேலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!