'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் செப்டெம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இன்றைய தினம் இப்படத்தில் இடம்பெற்ற 'பொன்னி நதி' பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாகம், செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒரு புறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் படத்தின் புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்: பார்த்தாலே போதையாகுது.. உடலோடு ஒட்டிய டைட் உடையில்... தொடையழகை தாராளமாக காட்டிய மாளவிகா மோகனன்!
அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்னி நதி' என்கிற முதல் சிங்கிள் பாடலை படக்குழு பிரமாண்ட விழா நடத்தி வெளியிட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்த 'பொன்னி நதி' பாடல் வெளியீட்டு விழாவில், ஜெயம் ரவி, நடிகர் ஜெயராம், கார்த்தி, ஏ.ஆர்.ரஹ்மான், மணிரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
கார்த்தியின் கதாபாத்திரமான வந்திய தேவன் பற்றி தெரியப்படுத்தும் வகையிலும், சோழ நகரின் அருமை பெருமைகள், நதிகள், சோழ நாட்டு கலைகள், அங்கு வாழும் பெண்கள், இயற்க்கை வளம் ஆகியவை இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளது மட்டும் இன்றி பாடியும் உள்ளார். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
மேலும் செய்திகள்: சிங்கிள் பிளீட் சேலையில்... ஜிமிக்கி கம்மல் அழகி சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோஸ்!
'பொன்னி நதி' பாடல் கேட்கும் போது, மனம் மயங்கி... உடல் சிலிர்க்க வைக்கிறது. படத்தை பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. தற்போது இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே அதிக ரசிகர்களால் ரசிக்கப்பட்ட பாடலாகும், சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகும் பாடலாகவும் மாறியுள்ளது.