பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ! பறக்கும் விமர்சனங்கள்...

By manimegalai a  |  First Published Jul 31, 2022, 5:26 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவராக கைது செய்யப்பட்டு, விடுதலை ஆகியுள்ள பேரறிவாளன் தன்னுடைய பெற்றோர் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய நிலையில், அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று, பேரறிவாளனுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவராக கைது செய்யப்பட்டு, விடுதலை ஆகியுள்ள பேரறிவாளன் தன்னுடைய பெற்றோர் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய நிலையில், அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று, பேரறிவாளனுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் தன்னுடைய அப்பா மற்றும் அம்மாவுடன் வசித்து வருகிறார். இதை தொடர்ந்து தற்போது பேரறிவாளன் தன்னுடைய அப்பா - அம்மாவிற்கு கொண்டாடிய பிறந்தநாள் விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு குத்தாட்டம் போட்டுள்ளார். இதற்க்கு ஒரு தரப்பினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
 

31 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பிறகு, விடுதலையாகியுள்ள பேரறிவாளன்... திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தன்னுடைய தாய் மற்றும் தந்தைக்கு ‘குயில் 80 அற்புதம் 75’ என்கிற தலைப்பில் இருவருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் விழா கொண்டாடினார்.

500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும்  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, நடிகர் சதயராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த விழாவில் கலந்து கொண்டு, பேரறிவாளனின் தந்தை குயில் தாசன் மற்றும் அவருடைய தாயார் அற்புத அம்மாளிடம் ஆசி பெற்றனர். மேடையில்  கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் இதில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள்,  ’குயில் 80 அற்புதம் 75’ என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டனர்.

மேலும் செய்திகள்: 3000 பேர் இதுவே முதல் முறை... நடிகை ரோஜா நிகழ்த்திய வித்தியாசமான கின்னஸ் சாதனை!
 

இந்த பிறந்தநாள் விழாவை மேலும் சிறப்பிக்கும் விதமாக அலங்காநல்லூர் சமர் பறை இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரறிவாளன் குழுவினருடன் ஆட்டம் போட்டது மற்றும், நடிகர் சத்யராஜ் பேரறிவாளனுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தரப்பினர் இதற்க்கு ஆதரவு தெரிவித்து வந்த போதிலும், மற்றொரு தரப்பினர் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனங்களை சத்யராஜிக்கு எதிராராக பறக்க விட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜ், பேரறிவாளன் நடனம் pic.twitter.com/N2O6KrSIrA

— தமிழீழ ஆவணக்காப்பகம் (@te_archive)

 

click me!