கொலைக்கான காரணத்தை புட்டு புட்டு வைக்கும் அமலா பால்..! விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் 'கடவார்'!

Published : Jul 31, 2022, 06:04 PM IST
கொலைக்கான காரணத்தை புட்டு புட்டு வைக்கும் அமலா பால்..! விரைவில் ஓடிடி-யில் வெளியாகும் 'கடவார்'!

சுருக்கம்

ஒரு வெற்றி படத்தை கொடுக்க காத்திருக்கும் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்து, தயாரித்திருக்கும் 'கடாவர்' திரைப்படம், டிஸ்னி +ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.  

மலையாள இயக்குநர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் தயாராகி உள்ள திரைப்படம் 'கடாவர்'. இதில் நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர்கள் ஹரிஷ் உத்தமன், முனீஸ்காந்த், திரிகன் (ஆதித் அருண்), பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெய ராவ் நடிகைகள் அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி இருக்கும் இந்த படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மெடிக்கல் கிரைம் த்ரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, ஷான் லோகேஷ் பட தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். 

மேலும் செய்திகள்: பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ! பறக்கும் விமர்சனங்கள்...
 

கடாவர்- முதுகுத்தண்டை சில்லிடச் செய்து, ரத்தத்தை உறையச் செய்யும் மெடிக்கல் க்ரைம் திரில்லர் திரைப்படம். கொலை வழக்கு ஒன்றினை போலீஸ் உயரதிகாரி விஷால், தனது தலைமையில் விசாரணையைத் நடத்துகிறார்.  இதில் தடயவியல் துறை நிபுணராக பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலா பால் நடிக்கிறார். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் எப்படி கண்டறிகிறார் என பல்வேறு திருப்பு முனைகளுடன் விறுவிறுப்பாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
 

‘கடாவர்’ படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், மிகவும்  குறுகிய காலக்கட்டத்திலேயே லட்சக்கணக்கானப் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனைப் படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அமலா பால், தயாரித்து, கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘கடாவர்’, ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் டிஸ்னி +ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாகிறது.

மேலும் செய்திகள்: 3000 பேர் இதுவே முதல் முறை... நடிகை ரோஜா நிகழ்த்திய வித்தியாசமான கின்னஸ் சாதனை!
 

இதுவரை ஒரு அமலா பால் மிகவும் எதிர்பார்த்து நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், இந்த படம்... மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக தனக்கு அமையும் என நம்பியுள்ளார் அமலா பால். தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!