பெருந்தலைவர் காமராஜ் 2 படத்தை எடுக்க உதவும் இயக்குனர் சீனுராமசாமி! ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி பேச்

Published : Jul 16, 2022, 07:41 PM IST
பெருந்தலைவர் காமராஜ் 2 படத்தை எடுக்க உதவும் இயக்குனர் சீனுராமசாமி! ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நெகிழ்ச்சி பேச்

சுருக்கம்

நம் தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்று  தலைவர், முன்னாள் முதல்வர், மக்கள் மனங்களில் என்றென்றும் குடியிருக்கும் பெருந்தலைவர் காமராஜர். அவரின் வாழ்க்கையை தற்போது வெள்ளித்திரையில் கொண்டு வந்த திரைப்படம் தான் 'பெருந்தலைவர் காமராஜ்'.  

இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'பெருந்தலைவர் காமராஜ் 2' படம் தயாராகி வருகிறது.  இப்படத்தின் டிரெய்லர் மற்றும் புத்தக வெளியீட்டு விழா முன்னணி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. ரமணா கம்யூனிகேஷன் சார்பில் இப்படத்தினை இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். 

இவ்விழாவினில் கலந்து கொண்டு சிறப்பித்த இயக்குநர் சீனு ராமசாமி இப்படம் குறித்து பேசுகையில்.... 

காமராஜ் மறையவில்லை உங்கள் கைதட்டல்களில் இன்னும் இருக்கிறார். நான் ஆரம்ப காலத்தில் பள்ளிகள் குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஆசைப்பட்டேன். அப்போது ஒரு பொட்டல்காட்டு பள்ளிக்கூடம் பற்றி அதை கட்ட சொன்னது யார் என்பது  பற்றி எடுக்க ஆசைப்பட்டேன் எத்தனை முயன்றும் முடியவில்லை. அந்த பொட்டல் காட்டில் பள்ளிக்கூடம் கட்டியவர் கர்மவீரர் காமராஜ் அவர்கள். ஒரு படம் எடுத்தால் அதன் ஊழல் வெளிவந்தது விடும் என எடுக்க விடவில்லை ஆனால் இந்த நாட்டில் ஒரு ஆவணப்படமே முடியாத போது உண்மையாய் வாழ்ந்து இத்தனை சாதனை படைக்க காமராஜால் எப்படி முடிந்திருக்கும். எப்படி இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தார் என ஆச்சர்யமாக இருக்கிறது. தன் வாழ்நாள் முழுதும் உண்மையை கடைபிடித்தவர். என் படத்தில் ஒரு வசனம் வரும் நான் காமராஜ் போல் கை சுத்தமானவண்டா என ஒரு பாத்திரம் சொல்லும் திரையில் மக்கள் அந்த வசனத்தை  கொண்டாடினார்கள். மக்கள் அவர் மீது அத்தனை அன்பு வைத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்: சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
 

உங்களுக்கு இந்த படம் நன்றாக எடுக்க தொழில்நுட்ப ரீதியில் என்ன உதவிகள் வேண்டுமானாலும் கேளுங்கள் கேமரா முதல் எல்லாம் நான் செய்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது காமராஜ் போல் இந்த படத்தை எடுக்க வேண்டியது தான். நம் முன்னோர்கள் எப்படி நம் ஆன்மாவை காக்கிறார்கள் என நாம் நம்புமிறோமோ அதே போல் அவர் உங்களை காப்பார். இந்த விழாவிற்கு என்னை அழைத்தது எனக்கு பெருமை. என் படங்களில் காமராஜரை பற்றி பேசியிருக்கிறேன். இன்று அவரது பிறந்த நாள் அவரின் பிறந்த நாளில் அவரின் நினைவை போற்றும் விழாவில் பங்கு கொள்வது எனக்கு வாழ்நாள் பாக்கியம் அனைவருக்கும் என் நன்றிகள். 

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகிறது.. விக்ரம், மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்!
 

இப்படத்தின் இயக்குனர்  இயக்குநர் AJ பாலகிருஷ்ணன் பேசியதாவது… காமராஜ் பற்றி முதன் முதலில் புத்தகம் மூலம் அறிந்த போது ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஜாதி, மதம், இல்லை, அவர் சாதனைகளுக்கு எல்லையில்லை. அவரும் காந்தியும் ஒரே மாதிரி தான். அவர்கள் கருத்துக்களாக வந்துவிட்டால் உங்களை விட்டு போகமாட்டார்கள், அவர் செய்த சாதனைகளை நான் படம்பிடிக்கிறேன் அவ்வளவு தான். இந்த காலத்தில் மக்கள் பணத்தில் மெட்ரோ, ஸ்மார்ட் சிட்டி கட்டுகிறார்கள் ஆனால் சாப்பிட்டாயா என கேட்க ஆளில்லை. ஒரு முதியவர் எனக்கு மூன்று பிள்ளைகள் அவர் சாப்பாடு போட்டதால் தான் பள்ளிக்கே அனுப்பினோம் என்றார். இன்று நாம் முன்னேயிருக்க வேண்டும் ஆனால் காலையிலும் சாப்பாடு போடுங்கள் என்ற நிலைக்கு வந்துள்ளோம் இது மாற வேண்டும். காமராஜ் சாதனைகள் உலகுக்கு தெரிய வேண்டும். இந்தப்படம் அதைச் செய்யும் நன்றி என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
 

காமராஜராக நடித்துவரும் பிரதீப் மதுரம்  பேசியதாவது… பாலா சார் காமராஜ் சீரியல் எடுக்க முனைந்த போது அப்பாவை பார்த்து அப்படியே கூட்டி வந்து நடிக்க வைத்தார்கள். 2004 ல் வெளிவந்த படம் என் அப்பா நடித்தது தான். 2005 ல் எதிர்பாரா விதமாக அப்பா தவறிவிட்டார். 2015 ல் அப்படத்தை டிஜிட்டலாக மாற்ற நினைத்த போது ஒரு சில காட்சிகள் எடுக்க வேண்டுமென நீ அப்பா போலவே இருக்கிறாய் என என்னை நடிக்க வைத்தார்கள் முதலில் நான் மறுத்தேன் ஆனால் கட்டாயப்படுத்தியே நடிக்க வைத்தார்கள் அந்தக்காட்சியில் நடித்த போது எனக்குள் என்னென்னவோ மாற்றங்கள். இந்த காலத்தில் இருப்பவர்களுக்கும் காம்ராஜரை அறிமுகப்படுத்த வேண்டுமென்கிற உங்களின் முனைப்பை நான் பாராட்டுகிறேன் நன்றிஎன தெரிவித்தார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ரிலீஸ் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பாகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகனுக்கு விடிவு காலம் பிறக்குமா? இறுதி தீர்ப்பு தேதி இதுதான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Raashi Khanna : ஓவர் கவர்ச்சி..! புடவையில் செம்ம லுக் விட்டு ரசிகர்கள் கண்களை குளிர வைக்கும் ராஷி கண்ணா..!