தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகன் சாலை விபத்தில் பலி! திரையுலகம் அதிர்ச்சி

By sathish kFirst Published Aug 29, 2018, 10:36 AM IST
Highlights

ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 61.

ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமாராவ் மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா ஹைதராபாத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

 தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த என்டிஆர்  மகன் என்டிஆர் நந்தமூரி ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவராக இருந்தார். இவர் கட்சி பொதுக் கூட்டத்துக்காக நேற்று கார் மூலம் சென்று கொண்டிருந்தார்.எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹரிகிருஷ்ணாவின் மகன் ஜானகிராமும் இதேபோலத்தான் ஒரு சாலை விபத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பலியானார்.

2014 ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நல்கொண்டா மாவட்டம் அகுபமுலா அருகே ஹைதராபாத் - விஜயவாடா நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஜானகிராம் பலியானார். அவருக்கு மனைவியும், மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் மகனைப் போலவே என்டிஆர் ஹரிகிருஷ்ணாவும் சாலை விபத்தில் பலியாகியிருப்பது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹரிகிருஷ்ணா முன்னாள் அமைச்சராவார்.ஹரிகிருஷ்ணா பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

ஹரிகிருஷ்ணா கடந்த  2008-ஆம் ஆண்டு மாநிலங்களவை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள்  உள்ளனர். முதல் மனைவிக்கு ஜானகி ராம் மற்றும் கல்யாண் ராம் ஆகிய மகன்களும் சுஹாசினி என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரே ஒரு மகன்  அவர் தான்  ஜூனியர் என்டிஆர் இவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் ஆவார். அதுமட்டுமல்ல, தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவின் சகோதரரும் ஆவார்.  முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மைத்துனரும் ஆவார். 

click me!