ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது பேசிய நடிகர் தனுஷ், போயஸ் கார்டன் வீடு பற்றிய பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
தனுஷின் 50வது திரைப்படமான ராயன் வருகிற ஜூலை 26-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷ் உள்பட ராயன் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய தனுஷ், தான் வாங்கிய போயஸ் கார்டன் வீடு பற்றியும் அதன் பின்னணியில் உள்ள குட்டி ஸ்டோரியையும் விளக்கி பேசினார்.
தான் போயஸ் காடனில் வீடு வாங்கியபோது அது மிகப்பெரிய பேசுபொருள் ஆனதாக கூறிய தனுஷ், ஏன் நாங்கெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்க கூடாதா.. தெருவுல இருந்தா கடைசி வரை தெருவுலயே தான் இருக்கனுமா என கேள்வி எழுப்பிய கையோடு தான் வீடு வாங்கியதன் பின்னணியில் உள்ள கதையை கூறினார்.
16 வயது இருக்கும் போது தனுஷ் அவரது நண்பருடன் கத்திட்ரல் சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். தான் மிகப்பெரிய சூப்பர்ஸ்டார் ரசிகன் என்பதால் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் ரஜினி வீட்டுக்கு ரூட் கேட்டு அங்கு சென்றிருக்கிறார். வீடருகே சென்றபோது போலீஸ் இருந்துள்ளனர். அவர்களிடம் ரூட் கேட்டதும் அவர்களும் ரஜினி வீட்டுக்கு வழி சொல்லிவிட்டு, உடனே திரும்பி வந்துவிடுமாறு கூறி அனுப்பி இருக்கின்றனர்.
இதையும் படியுங்கள்... கவுத்திவிட்ட கேப்டன் மில்லர்... 50வது படத்தில் கம்பேக் கொடுப்பாரா தனுஷ்? ராயன் மூவி சிறப்பம்சங்கள் ஒரு பார்வை
ரஜினி வீட்டை பார்த்த சந்தோஷத்துடன் அங்கிருந்து கிளம்பிய தனுஷ், இன்னும் கொஞ்சம் தூரம் சென்று பார்த்தபோது அங்கு போலீஸ் கூட்டமாக நின்றதை பார்த்து அதுபற்றி கேட்டிருக்கிறார். அப்போது தான் அங்கு ஜெயலலிதா வீடு இருப்பதை கூறி இருக்கிறார்கள். இதைக்கேட்டதும் பைக்கில் இருந்து இறங்கி, ஒரு நாள் இந்த ரிச்சான ஏரியாவில் ஒரு சின்ன வீடாவது வாங்கிவிட வேண்டும் என்கிற கனவோடு அங்கிருந்து கிளம்பினாராம்.
அப்படி அன்று 16 வயசு வெங்கடேஷ் பிரபுவுக்காக 20 வருஷம் உழைத்து இன்னைக்கு இருக்கிற தனுஷ் கொடுத்த கிஃப்ட் தான் அந்த போயஸ் கார்டன் வீடு என்று பேசி இருந்தார் தனுஷ். தனுஷின் ஒரினினல் பெயர் தான் வெங்கடேஷ் பிரபு. இப்படி தனுஷ் பேசிய அந்த பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தாலும் நெட்டிசன்கள் அவரை எக்ஸ் தளத்தில் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ரஜினி, ஜெயலலிதா போன்றவர்கள் எந்தவித பின்புலமும் இன்றி வந்து சினிமாவில் சாதித்தவர்கள். ஆனால் தனுஷ் தந்தையின் தயவால் சினிமாவுக்குள் ஈஸியாக வந்துவிட்டு இப்படி அவர்களோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என கமெண்ட் செய்துள்ளனர். மற்றொரு பதிவில், மனசுல ரஜினினு நெனப்பு, தனுஷ் சும்மா சீன் போடுறான் என சாடி இருக்கிறார். தனுஷ் சினிமாவில் நல்ல நடிகர்னு தெரியும், நிஜத்திலுமா என ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இப்படி தனுஷின் போயஸ் கார்டன் வீடு பற்றிய பேச்சுக்கு பலர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
🤔 What is this new level of idiocy from Dhanush?
The guy says that the incident happened when he was 16 y.o. Was he an outsider back then? No. His father was a well-known director who had lost his magic.
At 18 y.o, his father pooled finances to produce a film with him as the… pic.twitter.com/3i6JGBdY8P
இதையும் படியுங்கள்... 2024ல் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் LIST இதோ