கார்த்திக், கௌதம்கார்த்திக்கின் மிஸ்டர்.சந்திரமௌலி......ரிலிஸ் தேதி அறிவிப்பு

Published : Jul 23, 2024, 04:56 PM IST
கார்த்திக், கௌதம்கார்த்திக்கின் மிஸ்டர்.சந்திரமௌலி......ரிலிஸ் தேதி அறிவிப்பு

சுருக்கம்

gowtham karthick chandramouli movie release date



ஏப்ரல் 27ம் தேதி மிஸ்டர்.சந்திரமௌலி படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அப்பா,மகன்

திரு இயக்கத்தில், அப்பாவும் மகனுமான கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் முதல் முறையாக இணையும் படம் மிஸ்டர்.சந்திரமௌலி.

இந்த படத்தில் தேசிய விருது பெற்ற இரண்டு இயக்குனர்களான மஹேந்திரன் மற்றும் அகத்தியன் ஆகியோர் இணைகிறார்கள்.

மேலும் இவர்களை தவிர ரெஜினா கெசண்ட்ரா,வரலட்சுமி சரத்குமார், சதிஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

திரு

இயக்குனர் அகத்தியனும் நடிகர் கார்த்திக்கும் ஏற்கனவே ”கோகுலத்தில் சீதை” என்னும் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இயக்குநர் திரு, விஷால் நடித்த ”தீராத விளையாட்டு பிள்ளை”, ”நான் சிகப்பு மனிதன்” உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.திருவின் மாமனார் தான் இயக்குநர் அகத்தியன் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை சுற்றி படப்பிடிப்பு

சென்னையை சுற்றியுள்ள முக்கிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.மேலும் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் இரவே எடிட்டிங் என சரியாக திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.

ஏப்ரல் 27ல் ரிலிஸ்

இதனால் நம்பிக்கையுடன் ஏப்ரல் 27 ம் தேதி படத்தை ரிலிஸ் செய்ய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார்.மேலும் ஒளிப்பதிவாளராக எம்.ரிச்சர்ட் நாதன், எடிட்டராக சுரேஷ் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

திரைப்படம் தொலைக்காட்சி மற்றும் இணையதள மீடியாக்களில் கால் பதிக்கும் பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா

என்ற புதிய மீடியா நிறுவனத்திற்காக கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ்& டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!