நடிகை சமந்தா மற்றும் சின்மயியின் அட்ராசிட்டி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா, திறமையான நடிகை என்பதை பல படங்கள் மூலம் நிரூபித்துள்ளார். இதுவே இவர் திருமணம் ஆகி விவாகரத்து ஆன பின்னரும் ஹீரோயினாக நடிக்க காரணமாகவும் உள்ளது. அதே போல் அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் நட்புடனும் பழக தெரிந்தவர். பட பிடிப்பு இல்லாத நாட்களில், வெளிநாடுகளுக்கு வெக்கேஷன் செல்வது ஒருபுறம் இருந்தாலும், அடிக்கடி தன்னுடைய நட்புகளையும், அவர்களின் குடும்பங்களையும் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் சமந்தாவின் மிகவும் நெருங்கிய நண்பர் தான் நடிகர் ராகுல் ரவீந்திரன். இவரின் மனைவி சின்மயியும் சமந்தாவுக்கு மிகவும் நெருங்கிய தோழிகள் ஆவார். தன்னுடைய பெற்றோரை பார்க்க சென்னைக்கு வரும் போதெல்லாம், சின்மயி வீட்டுக்கு சமந்தா செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஒருமுறை சின்மயியின் இரட்டை குழந்தைகளுடன் சமந்தா எடுத்து கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது.
Vishal: அள்ளி கொடுக்கப்பட்ட சம்பளம்... தெலுங்கு படத்தில் டாப் ஹீரோவுக்கு வில்லனாகிறாரா விஷால்?
அதே போல் சமந்தா எந்த ஒரு சர்ச்சையில் சிக்கினாலும் சமந்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ராகுல். சமீபத்தில் தவறான மருத்துவ சிகிச்சை குறித்து, சமந்தா போட்ட பதிவுக்கு மருத்துவர்கள் முதல், பலர் தங்களின் கோவமான கருத்தை பதிவு செய்த போது, சமந்தாவுக்கு ஆதரவாக நடிகர் ராகுல் பேசி இருந்தார்.
தற்போது சின்மயி மற்றும் சமந்தாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் சின்மயி மைக் முன்பு அமர்த்திற்கு, இருவரும் தங்களுக்குள் ஜாலியாக பேசி கொள்கின்றனர். பின்னர் சின்மையில் விளையாட்டாக கண்ணை கசக்கி கொண்டு, சமந்தா தன்னை டார்ச்சர் செய்வதாக கூறுகிறார். குறும்புகள் நிறைந்த இந்த வீடியோ தற்போது தமிழ் சினிமாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.