- Home
- Gallery
- Vishal: அள்ளி கொடுக்கப்பட்ட சம்பளம்... தெலுங்கு படத்தில் டாப் ஹீரோவுக்கு வில்லனாகிறாரா விஷால்?
Vishal: அள்ளி கொடுக்கப்பட்ட சம்பளம்... தெலுங்கு படத்தில் டாப் ஹீரோவுக்கு வில்லனாகிறாரா விஷால்?
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஷால், தெலுங்கு திரைப்படத்தில் பிரபல டாப் ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க போவதாக புதிய தகவல் ஒன்று உலா வருகிறது.

Vishal
கோலிவுட் திரையுலகில் உதவி இயக்குனராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர் தான் விஷால். விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தமிழில் பல படங்களை தயாரித்து பிரபலமானவர் என்பதால், இவரது பூர்வீகம் ஆந்திரா என்றாலும், விஷால் படித்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான்.
Vishal
சிறு வயதிலேயே, 'ஜாடிக்கேத்த மூடி' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் செல்லமே படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் விஷால். முதல் படத்திலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார். இதை தொடர்ந்து விஷால் நடித்த, சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி போன்ற படங்கள் விஷாலை முன்னணி இடத்திற்கு நகர்த்தியது.
நடிகர் என்பதை தாண்டி தமிழில், விஷால் ஃபிலிம் ஃபேட்டரி நிறுவனம் சார்பில், பாண்டிய நாடு, துப்பறிவாளன், இரும்பு திரை, வீரமே வாகை சூடும் போன்ற சில படங்களை இயக்கி அதில் நடித்தும் உள்ளார். விஷாலுக்கு தமிழ் மொழியை தாண்டி தெலுங்கிலும் ரசிகர்கள் உள்ள நிலையில், இவருடைய படங்கள் டப்பிங் செய்து ஆந்திரா , மற்றும் தெலுங்கானாவில் வெளியிடப்படுகின்றன.
எனவே தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான விஷால், தற்போது தெலுங்கில் பிரபல முன்னணி அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும், இதற்காக மிகப்பெரிய தொகை விஷாலுக்கு கொடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தெலுங்கில் இவரை வில்லனாக நடிக்க வைக்க, டோலிவுட் வட்டாரத்தில் இருந்து சிலர் அணுகியபோது அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்ட விஷால்... தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார் என கூறப்பட்டாலும், இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
பான் இந்தியா படம் மூலம், சமீப காலமாக தெலுங்கு நடிகர்களின் படங்களுக்கும் கோலிவுட் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே போல் மற்ற மொழிகளில் ஹீரோவாக இருக்கும் சுதீப், பகத் பாசில், போன்ற நடித்தார்கள் தமிழில் வில்லனாக நடிக்கும் நிலையில், விஷால்.. அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.