நடிகர் சிவகார்த்திகேயன், சூரியை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள கொட்டுக்காளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் பல்வேறு பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்ற கொட்டுக்காளி திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை பிரபல நடிகரும், இப்படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த விடுதலை பார்ட் 1 மற்றும் கருடன் ஆகிய 2 படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சர்வதேச அரங்கில் பல்வேறு பாராட்டுக்களை குவித்த, கொட்டுக்காளி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இந்த படத்தை, 'கூழாங்கல்' படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். சூரி கதையின் நாயகனாக நடிக்க, ஹெலன், கும்பலாங்கி நைட்ஸ், கம்பேலா, போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்ற நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இப்படம் க்ருய்து சிவகார்த்திகேயன் பேசும் போது இப்படம் விடுதலை படத்தை விட சூரியை பற்றி அதிகம் பேசப்படும் படமாக இருக்கும் என தெரிவித்தார்.
Samantha: என்ன டார்ச்சர் பண்ணுறா... பாடகி சின்மயியை கதற விட்ட நடிகை சமந்தா! அட்ராசிட்டி வீடியோ!
ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக இருக்கும், இப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், மூட நம்பிக்கை பற்றயும், ஆணாதிக்கம் பற்றியும் மற்றும் மனித உணர்வுகளை எடுத்துரைக்கும் விதமாக இப்படம் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதமே இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில்... இந்த ஆண்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து பல்வேறு விருது விழாக்களில் இப்படம் கலந்து கொண்டதால், ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.