விருமன் படத்தில் மாஸ்டர் பட BGM-ஆ..! அனிருத்தை காப்பி அடித்தாரா யுவன்? - கிளம்பிய புது சர்ச்சை

Published : Aug 12, 2022, 01:14 PM IST
விருமன் படத்தில் மாஸ்டர் பட BGM-ஆ..! அனிருத்தை காப்பி அடித்தாரா யுவன்? - கிளம்பிய புது சர்ச்சை

சுருக்கம்

Viruman : விருமன் படத்தில் இடம்பெறும் டைட்டில் கார்ட் பிஜிஎம், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்காக அனிருத் போட்ட பிஜிஎம்-ஐ போல் உள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். 

சூர்யா தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் கார்த்தி கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளதால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், விருமன் படம் இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 475-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. விருமன் படம் இன்று வெளியானதால், அதிகாலையிலேயே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், மேல தாளங்கள் முழங்க இப்படத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்... ஹீரோயினாக ஜொலித்தாரா ஷங்கர் மகள்?... விருமன் நாயகி அதிதி நடிப்பை பார்த்து எல்லாரும் சொல்லும் ‘அந்த’ ஒரு விஷயம்

இந்நிலையில், விருமன் படத்தில் இடம்பெறும் டைட்டில் கார்ட் பிஜிஎம், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திற்காக அனிருத் போட்ட பிஜிஎம்-ஐ போல் உள்ளதாக புது சர்ச்சை கிளம்பி உள்ளது. மாஸ்டர் படத்தில் விஜய்யின் அறிமுக காட்சியில் வரும் பிஜிஎம்-ஐ சற்று வேகம் குறைத்து கேட்டால் எப்படி இருக்குமோ, அதே போல் விருமன் பட டைட்டில் கார்ட் பிஜிஎம் உள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்துவருகின்றனர்.

ஆனால் இதனை மறுக்கும் கார்த்தி ரசிகர்கள், மாஸ்டர் படத்தின் பிஜிஎம்-மே யுவன் சென்னை 28 படத்துக்காக போட்ட ஜல்சா பண்ணுங்கடா பாடல் பிஜிஎம்-ன் காப்பி எனக் கூறி பதிலடி அளித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாக வைரல் ஆகி வருகின்றன. யார் காப்பி அடித்தது என்கிற மோதலும் யுவன் - அனிருத் ரசிகர்களுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... கார்த்தி - முத்தையா காம்போவின் ‘கொம்பன்’ மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? - விருமன் படத்தின் முழு விமர்சனம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!