Vendhu thanindhathu kaadu : சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ் தெரியுமா?

Published : Aug 12, 2022, 12:58 PM ISTUpdated : Aug 12, 2022, 01:01 PM IST
Vendhu thanindhathu kaadu : சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் செகண்ட் சிங்கிள் எப்ப ரிலீஸ் தெரியுமா?

சுருக்கம்

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்குளாக "மறக்குமா நெஞ்சம்" என்கிற பாடல் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி மாலை இந்த பாடல் வெளியாக உள்ளது. இதற்கான வரிகளை கவிதா மாறன் எழுதியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து பத்து வருட இடைவெளிக்கு பிறகு கௌதம் வாசுதேவ் மேனன் சிம்பு மீண்டும் இணைந்துள்ளனர். இந்த திட்டத்திற்கு வெந்து தணிந்தது காடு என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிலம்பரசன்,  சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்,.     

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இதன்  விநியோகிக்கும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக  வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் சிங்கள் கடந்த மே 6-ம் தேதி வெளியானது. காலத்துக்கும் நீ வேணும் என்ற தலைப்புடன் வெளியாகிய இந்த பாடலை தாமரை எழுதியிருந்தார்.  இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கிடையே ஆகஸ்ட் 6ஆம் தேதி அன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

மேலும் செய்திகளுக்கு...எல்லை மீறிய கவர்ச்சி... பேன்ட் போடாமல் ஷர்ட் மட்டும் அணிந்து... பப்பி ஷேமாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா!

 

நதிகளிலே நீராடும் சூரியன் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த போஸ்ட ரில் தூங்கும் ஆண்கள் குழு உடன் சிம்பு காணப்பட்டார். இதன் மூலம் மற்ற கௌதம் மேனனின் படங்கள் இருந்து வெந்து தணிந்தது காடு மாறுபட்டதாக இருக்கும் என தெரிகிறது. அந்த போஸ்டர் உடன் இயக்குனர், ஒரு சிறந்த நடிகர் பணியில் இருக்கும் போது அது அனைத்தும் அற்புதமாக இருக்கும் மற்றும் ஒரு சில சூப்பர் டெக்னீசியன்களுடன் படம் எடுப்பது மிகவும் நன்றாக இருக்கிறது என கூறு இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...கட்டப்பாவாக மாறிய காஜல்... பாகுபலியாக மாறி அவரது குட்டி மகன்... ராஜமௌலிக்கு டெடிகேட் செய்த வேற லெவல் போட்டோ..!

பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் பத்தாம் தேதி அன்று இந்த படத்தின் டீசர் வெளியானது. கிராமப்புற   பின்னணியில் இருந்து வந்த ஒரு இளைஞனின் கதையை விவரிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாவது சிங்குளாக "மறக்குமா நெஞ்சம்" என்கிற பாடல் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி மாலை இந்த பாடல் வெளியாக உள்ளது. இதற்கான வரிகளை கவிதா மாறன் எழுதியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கணவர் இறந்த பின் வீட்டுக்குள் முடங்கிய மீனா... வெளியே அழைத்து வந்த இரு பிரபலங்கள்! வைரலாகும் பீச் போட்டோஸ்!
 

சிம்பு கடைசியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்திருந்த மாநாடு பிளாக் பாஸ்டர் படமாக அமைந்தது. நேர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தை சுரேஷ்காமாட்சி தயாரித்திருந்தார். பாரதிராஜா, கருணாகரன், கல்யாணி பிரியதர்ஷினி மற்றும் பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர்  இந்த படத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!