மும்பை காவல்துறையில் ஒலித்த ஸ்ரீவள்ளி..புஷ்பா இசைக்கு எகிறும் மவுசு..

Published : Mar 16, 2022, 02:19 PM ISTUpdated : Mar 16, 2022, 02:22 PM IST
மும்பை காவல்துறையில் ஒலித்த ஸ்ரீவள்ளி..புஷ்பா இசைக்கு எகிறும் மவுசு..

சுருக்கம்

‘புஷ்பா’ ஃபீவர் மும்பை காவல்துறையினரும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் காக்கி ஸ்டுடியோவின் ஸ்ரீவள்ளி இசையை காவலர்கள் வாசித்து அசத்தி உள்ளனர்.  

 அல்லு அர்ஜுனின் புஷ்பா :

தெலுங்கி சூப்பர் கூல் நாயகன் அல்லு அர்ஜுனின் மாறுபட்ட தோற்றத்தில் வெளியான படம் புஷ்பா. இதில் நாயகியாக ரஷ்மிக்கா மந்தன்ன நடித்து அசத்தியிருந்தார்.  பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்த இந்த படத்தை நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் என இருவர் தயாரித்தனர். இதன் வெளியீட்டு உரிமையை லைகா தட்டி சென்றது.

புஷ்பா தி ரைஸ் :

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் நாயகன் செம்மரம் கடத்தும் கும்பலின் தலைவனை சித்தரிக்கப்படுகிறார். முதலில் மரம் வெட்டுபவராக இருக்கும் புஷ்பா தனது புத்தி கூர்மையால் தலைவனாவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு காட்சியிலும் அல்லு அர்ஜுன் மாஸ் காட்டி இருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...டேவிட் வார்னர் முதல் சுரேஷ் ரெய்னா வரை... கிரிக்கெட் வீரர்களை தொற்றிக்கொண்ட ‘புஷ்பா’ ஃபீவர் - வைரலாகும் வீடியோ

துடுக்கான  ஸ்ரீவள்ளி : 

நாயகி ரஷ்மிக்கா மற்ற படங்களில் அழகான கன்னியாக தோன்றி அசத்தி இருந்தாலும். இந்த படத்தில் தனது துடுக்கான நடிப்பை காட்டி ரசிகர்களை ஈர்த்திருந்தார். அதோடு கிராமத்து பெண்ணாக தனது திறமையை வெளிக்கொணர்ந்த ராஷ்மிக்கா மாறுபட்ட மேக்கப்பில் வித்யாசத்தை வெளிக்காட்டினார்.

வசூலை குவித்த புஷ்பா :

கடந்த டிசம்பர் 17-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியான இப்படம் அனைத்து மொழிகளிலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. அதோடு இந்த படத்திற்கு வாடா மாநிலங்களில் மவுசு கூடியதோடு அல்லு அர்ஜுனை பான் இந்தியா ஹீரோவாக்கியது.

செம ஹிட் அடித்த ஸ்ரீவள்ளி :

புஷ்பா படத்திலிருந்து வெளியான ஸ்ரீவள்ளி பாடல் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளது. அதோடு எக்கச்சக்க ரில்ஸும் ஆகிவிட்டது. பல பிரபலங்களும் ஸ்ரீவள்ளி ஸ்டெப்பை ரீல்ஸ் செய்து விட்டனர். அதோடு கிரிக்கெட் வீரர்களை இந்த டிரெண்டை பின்பற்றி வருகின்றனர். 

மேலும் செய்திகளுக்கு...Emma sings the Srivalli : எம்மா குரலில் ஸ்ரீவள்ளி..புஷ்பா பாடலை தெலுங்கில் பாடி அசத்தும்..ஆங்கில பாப் பாடகி..

மும்பை போலீஸில் நுழைந்த ஸ்ரீவள்ளி ஃபீவர் :

முதல் பாகமே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த நிலையில் ஸ்ரீவள்ளி பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் மும்பை காவல் துறை பேண்ட் ஆன  காக்கி ஸ்டுடியோவின் ஸ்ரீவள்ளி இசையை காவலர்கள் வாசித்து அசத்தி உள்ளனர்.  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?