ஏக்கத்தோடு சின்ன வயசுல ஷூட்டிங் பார்த்தேன்..இன்னைக்கு அந்த பேரழகி கூட நடிக்கிறேன்! பெருமிதத்துடன் ஐஸ்வர்யா..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 16, 2022, 12:34 PM IST
ஏக்கத்தோடு சின்ன வயசுல ஷூட்டிங் பார்த்தேன்..இன்னைக்கு அந்த பேரழகி கூட நடிக்கிறேன்! பெருமிதத்துடன் ஐஸ்வர்யா..!

சுருக்கம்

Aishwarya rajesh: ஐஸ்வர்யா ராஜேஷ் இணையத்தில் புன்னகை அரசி சினேகா குறித்து பகிர்ந்து கொண்ட செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். 

ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப கால திரைப்பயணம்:

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பட நடிகை என்பதை தாண்டி, சிறந்த நடன கலைஞர் மற்றும் தொகுப்பாளினி என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் திரைப்படத்துறைக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா,உட்பட பல படங்களில் இவரை தமிழ் மக்களிடம் கொண்டு சென்றது. இருப்பினும், இவருக்கு சிறந்த நடிகை என்ற விருதை பெற்று தந்தது தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்க முட்டை திரைப்படம் ஆகும்.இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்  திரைப்பயணம்:

இதனை தொடர்ந்து, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு, பல்வேறு தெலுங்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. கடைசியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது, தமிழில் 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். அத்துடன் விளம்பர படங்களிலும் வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்  சினேகாவுடன் விளம்பரம்:

சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சினேகா ஆகிய இருவரும், விளம்பரம் படமொன்றில் இணைந்து நடித்துள்ளனர். இந்த விளம்பர படத்தில் சினேகா உடன் நடித்தது பெருமையாக இருந்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..புனீத் ராஜ்குமார் நினைவால் கதறி அழுத பிரியா ஆனந்த்....நிழல் உலகில் மட்டுமல்ல..அவர் நிஜ உலகிலும் ஹீரோ தான்..!

வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவு:

அதில் அவர், நடிகை சினேகா ஒரு அழகான நடிகை. பார்த்தால் பார்த்து கொண்டே இருக்கலாம். நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது சினேகாவின் படப்பிடிப்பை ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ஒரு மூலையில் நின்று எனது அம்மாவுடன் பார்த்தேன். எனது அம்மா கூப்பிட்ட போதிலும் அந்த படப்பிடிப்பில் இருந்து வெளியே வர மனதே வரவில்லை. அப்படி  இன்று அவருடன் ஒரு விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுக்கும் ஆதி குணசேகரன்... எதிர்நீச்சல் சீரியலில் அடிபொலி ட்விஸ்ட் வெயிட்டிங்