புனீத் ராஜ்குமார் நினைவால் கதறி அழுத பிரியா ஆனந்த்....நிழல் உலகில் மட்டுமல்ல..அவர் நிஜ உலகிலும் ஹீரோ தான்..!

Anija Kannan   | Asianet News
Published : Mar 16, 2022, 11:26 AM ISTUpdated : Mar 16, 2022, 11:30 AM IST
புனீத் ராஜ்குமார் நினைவால் கதறி அழுத பிரியா ஆனந்த்....நிழல் உலகில் மட்டுமல்ல..அவர் நிஜ உலகிலும் ஹீரோ தான்..!

சுருக்கம்

Priya anand: புனீத் ராஜ்குமார்  குறித்து பேசும் போது, பிரியா ஆனந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் நாளை ரிலீசாக உள்ளது. 

கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். கர்நாடக மக்களின் மனங்களை மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட பல பேரின் நெஞ்சங்களை வென்று எடுத்தவர் ஆவார்.  புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் என்பதை தாண்டிய அவரது மனிதநேயம், மக்களுக்கு உதவும் குணம் ஆகியவற்றால் இன்றும் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

''அப்பு'' என்று செல்லமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி, ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். 

இவர்,  2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி முடிந்து வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டு மொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

 'ஜேம்ஸ்' படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு:

 புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில் வரும் 17 ஆம் தேதி நாளை ரிலீசாக உள்ளது. புனீத்தின் கடைசி படம் திரையில் வருகிறது என்பதால், அவரின் ரசிகர்கள் இந்தப் படத்தை காண மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 பிரியா ஆனந்த்:

படத்தில் புனீத் சீக்ரெட் ஏஜெண்டாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர் புனீத்துடன் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் சரத்குமார், ஆதித்யா மேனன் ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதறி அழுத பிரியா ஆனந்த்:

 புனீத் ராஜ்குமார் நிழல் உலகில் மட்டுமல்ல..அவர் நிஜ உலகிலும் ஹீரோ தான். என்றார். தொடர்ச்சியாக அவர் பேசும் போது , அவருடன் முதன்முதலில் நடித்தபோது எனக்கு கன்னட வார்த்தைகளை, கோயில்களை மற்றும் உணவுகளை அறிமுகப்படுத்தினார். அவ்வளவு பெரிய ஹீரோ என்னுடைய இயல்பாக பேசினார். மற்றவர்களிடம் எப்படி இயல்பாக இருப்பது என்று அவரிடம் கற்று கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க...Godfather movie : அட்ராசக்க... ஷாருக்கானை தொடர்ந்து சல்மான் கான் உடன் கூட்டணி - மாஸ் காட்டும் நயன்தாரா

அவர் என்றுமே என்னுடைய என் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.  தற்போது ஜேம்ஸ் படத்தில் அவர்மாஸ் காட்டியுள்ளார். அவருடன் நடித்தது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், தெரிவித்தார்.  மேலும்,  புனீத் ராஜ்குமாரின் ரசிகர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும்  என்றார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?