Alia Bhatt : காதலருடன் பிறந்தநாள் கொண்டாடும் அலியாபட் ..வெளியான பிரமாஸ்தரம் சிவனின் ஈஷா ப்ரோமோ ..

Kanmani P   | Asianet News
Published : Mar 15, 2022, 02:15 PM IST
Alia Bhatt : காதலருடன் பிறந்தநாள் கொண்டாடும் அலியாபட் ..வெளியான பிரமாஸ்தரம் சிவனின் ஈஷா ப்ரோமோ ..

சுருக்கம்

Alia Bhatt  : அலியாபட்டின் பிறந்த நாள் ஸ்பெஷலாக பிரம்மாஸ்திரா ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ அந்த படத்தில் அலியாபட்டின் கதாபத்திரம் அடங்கிய அதிரடி காட்சிகளுடன் உள்ளது. 

பாலிவுட் பிரின்சஸ் அலியாபட் :

அலியாபட் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரிட்டிஷ் பெண்.  1999 -ல் 'சங்கர்ஷ்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான  இவர் கரண் ஜோஹரின் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் (2012) இல் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.  கடந்த 2014-ல் வெளியான ஹைவேயில் "சூஹா சாஹா" பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பாடியிருந்தார் அலியா. இவரது திறமைக்கு கிடைத்த பரிசாக  இதுவரை நான்கு பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.

மாறுபட்ட தோற்றத்தில் கங்குபாய் கத்தியவாடி :

அலியாபட் தான் ஒரு துணிச்சலான நடிகை என்பதை உரசித்தப்படுத்தும் விதமாக சமீபத்தில் கங்குபாய் கத்தியவாடி என்னும் நடித்திருந்தார். இந்த படம் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியது மற்றும் ஜெயந்திலால் கடா மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரால் தயாரிக்கப்பட்டது.  இந்த கதை இளம் கங்குபாய் வாழ்க்கையில் நடந்து சம்பவங்களை மையமாக கொண்டது.  இந்த படத்தில்அரசியலுக்கு வரும் முன் கங்குபாய்  காமாதிபுராவின் சிவப்பு விளக்கு பகுதியில் இருப்பதாக காட்டப்பட்டிருக்கும் . இதற்காக கிட்டத்தட்ட ஒரு வாரம் அந்த பகுதியில் தங்கி அங்குள்ள பாலியல் தொழிலார்களின் உடை பாவனைகளை கற்றுக்கொண்டாராம் அலியாபட். இந்த படம் அவருக்கு மிகுந்த பாராட்டை பெற்று தந்தது.

மேலும் செய்திகளுக்கு ...rajamouli praises ranbir :பாலிவுட்டில் யாரும் செய்யாத காரியம்..ரன்பீர் கபூரின் செயலால் அதிர்ச்சியான ராஜமவுலி..

ரன்பீர் கபூர் - அலியாபட் காதல் :

மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகனான ரன்பீருக்கும்,  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகளான ஆலியாவும் கடந்த 2018 -ல் இருந்து காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இவர்கள் சமீபத்தில் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரா படத்தில் நடிக்கையில் காதல் மலர்ந்தாகவும் ஒரு பேச்சுண்டு.

தள்ளிப்போகும் திருமணம் :

பாலிவுட் பிரபலங்களான இருவருக்கும் கடந்த 2020-ல் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா நெருக்கடியால்  திருமணமும் தடைபட்டது. இதற்கிடையே  பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அலியா, திருமண ஏற்பாடுகளை இந்த கொரோனா பரவல் பாழக்கிவிட்டது. எனினும், பல வருடங்களுக்கு முன்பே எனக்கும், ரன்பீருக்கும் மனதளவில் திருமணம் நடந்துவிட்டது, இருவரும் மனதளவில் தம்பதிகளாக வாழ்ந்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

சிவப்புராணம் பிரம்மஸ்திரா  :

இந்திய புராணங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரா  நீண்ட இடைவெளிக்கு பிறகு வரும்  செப்டம்பர் 9, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இதில் அமிதாப் பச்சன் , ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட் நடித்துள்ளனர்.  அயன் முகர்ஜியின் உருவாக்கமான இந்த படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் மௌனி ராய் ஆகியோரும் நடித்துள்ளனர்.  இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பன் மொழிகளில் வெளியாகிறது.

முன்னதாக படத்தின் முதல் பார்வை வெளியாகி நல்ல வெற்றியை கண்டதோடு. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகளுக்கு ...Alia Bhatt in bathtub : பாத் டப்பில் மல்லாக்கப்படுத்தபடி ஆலியா பட்.. இங்க போயா போட்டோ எடுப்பாங்க..

அலியாபட் பிறந்த நாள் கொண்ட்டாட்டம் : 

பாலிவுட் பிரின்சஸ் அலியா பட் தனது 29 வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு அலியாவின் காதலர் ரன்பீர் கபூரம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான ஈஷா ப்ரோமோ :

அலியாபட்டின் பிறந்த நாள் ஸ்பெஷலாக பிரம்மாஸ்திரா ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ அந்த படத்தில் அலியாபட்டின் கதாபத்திரம் அடங்கிய அதிரடி காட்சிகளுடன் உள்ளது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!