நடிகர் மயில்சாமி கடன் வாங்கியும், நகைகளை அடமானமாக வைத்தும் ஏழைகளுக்கு உதவி செய்தார்.
முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழியில் வாழ்ந்து வந்தார். ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்காக கொடுக்கணும் என்ற பாடலை வேத வாக்காக எடுத்துக் கொண்டு அதற்கேற்ப வாழ்ந்தார். தன்னால் முடியாவிட்டாலும் பிறரிடம் கடன் வாங்கி கூட உதவி செய்யும் மனசு இவரை விட்டால் வேறு யாருக்கும் வராது. இவன் என்னடா கடன் வாங்கி உதவி செய்கிறான் என்று கூட பலரும் சொல்வார்களாம்.
Actor Mayilsamy : காற்றில் கலந்த காமெடி கிங்... நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது
இவரைப் பற்றி நடிகர் விவேக் கூட ஏராளமான உண்மைகளை கூறியிருந்தார். இயற்கை சீற்றங்களின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்துள்ளார். சென்னை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார்.
வீட்டிற்கு அருகில் தனது சொந்த செலவில் உணவுகளை சமைத்து அவரே ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளார். கொரோனா காலத்தின் போது பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு சமையலுக்கு தேவையான பொருட்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். தன்னிடம் பணம் இல்லையென்றாலும் கூட மற்றவர்களிடம் கடன் வாங்கி உதவி செய்துள்ளார்.
கடன் அதிகமான நிலையில், வீட்டிலிருந்த நகைகளை அடமானம் வைத்து ஏழை எளியவர்களுக்கு உதவி செய்தார். அப்படி வைக்கப்பட்ட நகைகளை அண்மையில் தான் மயில்சாமி மீட்டிருக்கிறார். இப்படி ஏழை, எளியவர்களுக்காக உதவி செய்து வாழ்ந்து வந்த மயில்சாமி நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
சிவ வாத்தியங்கள் முழங்க... நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் - கலங்கவைக்கும் வீடியோ இதோ