Actor Mayilsamy : கண்கலங்க வைக்கும் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ

By Ganesh A  |  First Published Feb 19, 2023, 9:12 AM IST

நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் என்கிற படத்துக்காக டப்பிங் பேசியபோது எடுக்கப்பட்ட கடைசி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று காலமானார். நேற்று இரவு முழுவதும் சிவராத்திரி பூஜையில் கலந்துகொண்டுவிட்டு இன்று அதிகாலை வீட்டுக்கு வந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

நடிகர் மயில்சாமி மாரடைப்பால் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ஏராளமான சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... யார் இந்த மயில்சாமி..? நடிகராக மட்டுமில்லாமல் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டது ஏன்.?

இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அவர் தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் என்கிற திரைப்படத்திற்காக நேற்று டப்பிங் பேசி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கண்கலங்க செய்துள்ளது. அந்த வீடியோவில் மிகவும் ஆரோக்கியத்துடன் இருக்கும் அவருக்கு இப்படி ஒரு மரணமா என ரசிகர்கள் கலங்கிப்போய் உள்ளனர்.

அந்த வீடியோவில், ‘மாப்ள நான் சொல்றத கேளு மாப்ள. விஷயம் இது இல்லை. நான் அக்காட்ட சொல்லிருக்கேன், எல்லாமே அவ பாத்துப்பா. இங்க பாரு, நீ யாருக்கும் மனசுல துரோகம் நினைக்காம ஃபிரீயா இரு. நீ கரெக்டா இரு நிறையா சம்பாதிப்ப” என பேசியுள்ளார் மயில்சாமி. கிளாஸ்மேட்ஸ் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மயில்சாமி 'கிளாஸ்மேட்ஸ்' படத்திற்காக நேற்று டப்பிங் பேசியபோது எடுத்த கடைசி வீடியோ! pic.twitter.com/xVLX0R4fa5

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இதையும் படியுங்கள்... Mayilsamy : நடிகர் மயில்சாமி காலமானார்.. மறைந்தாலும் மறக்க முடியாத நகைச்சுவை கலைஞனின் திரைப்பயணம் - ஒரு பார்வை

click me!