"பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உண்மை..." முதல்வரின் கைக்கு போன பகீர் அறிக்கை... கலக்கத்தில் நடிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 2, 2020, 11:32 AM IST
Highlights

கேரள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள்  குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிக்கை அளித்துள்ளது. 

உலகையே உலுக்கிய 'மீ டூ' விவகாரத்திற்கு முன்பு கேரள திரையுலகையே ஒரு சம்பவம் நிலைகுலைய வைத்தது. 2017ம் ஆண்டு தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு, சிலரால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடை மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான திலீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பட வாய்ப்பிற்காக நடிகர்கள் மட்டுமல்லாது, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரும் தங்களை படுக்கைக்கு அழைப்பதாக நடிகைகள் தரப்பில் இருந்து சரமாரி புகார்கள் குவிந்தன.

இதனையடுத்து மலையாள நடிகைகள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் டபிள்யு.சி.சி. என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்பைச் சேர்ந்த பார்வதி, ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியார் உள்ளிட்ட பிரபல நடிகைகளின் குழு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர். அதில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதன்படி நீதிபதி ஹேமா தலைமையில் அமைக்கப்பட்ட குழு. கேரள திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள்  குறித்து முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அறிக்கை அளித்துள்ளது. அதில் நடிகைகள் மட்டுமல்லாது, மேக்அப் ஆர்ட்டிஸ்ட், சிகை அலங்கார நிபுணர்கள் என சினிமாவில் பணியாற்றும் அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாகவும், பட வாய்ப்பிற்காக மலையாள நடிகர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாகவும் கூறப்படுப்பட்டுள்ளது. 

மேலும் பட வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட மலையாள திரைத்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட சேட்டன் நடிகர்கள் பலரும் கலக்கத்தில் உள்ளனராம். 

click me!