அசத்தலாக பேசிய விஜய்! வைரலாகும் பழைய  வீடியோ!

அசத்தலாக பேசிய விஜய்! வைரலாகும் பழைய வீடியோ!

Published : Sep 14, 2018, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 09:25 AM IST

அப்பா என்னை சினிமாவில் அறிமுகம் செய்யவில்லை என்றால் இப்படி தான் செய்திருப்பேன்; தளபதி விஜய்-ன் அசத்தல் பேச்சு; வைரல் வீடியோ

தமிழ் திரையுலகில் தளபதியாக இன்று அனைவர் மனதிலும் பதிந்திருக்கும் விஜய் , திரையுலகிற்கு அறிமுகமானது அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் தான். சிறுவனாக இருந்த போதே வெற்றி எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் தொடந்து இந்த துறையில் முன்னேறியது அவரின் கடின உழைப்பினால் மட்டுமே. 

தளபதி விஜய்-ன் இந்த வெள்ளித்திரை வெற்றிகள் அவருக்கு உடனடியாக, எளிதாக வந்து சேந்தது கிடையாது.
 பல தோல்விகளை தாண்டி விடா முயற்சியுடன் அவர் மேற்கொண்ட உழைப்பு தான் அவருக்கு இன்று இந்த உயரிய இடத்தை தமிழ் திரையுலகில் பெற்று தந்திருக்கிறது. தற்போது விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

சென்ற ஆண்டு தீபாவளியை மெர்சல் தீபாவளி ஆக்கியது போல, இந்த ஆண்டு தீபாவளியை சர்கார் தீபாவளியாக மாற்றிட அவரது ரசிகர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். என்ன தான் ஒரு பெரிய நடிகனாக வளர்ந்து நின்றாலும், பெற்றோருக்கு அவர்கள் பிள்ளைகள் தான். அந்த வகையில் விஜய் தனது பெற்றோர் கூறித்து மனம்விட்டு பேசி இருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், விஜய் தனது தாய் தந்தையை பற்றி புகழ்ந்திருக்கிறார்.

பொதுவாகவே விஜயின் பெற்றோர் திரைத்துறையில் இருந்ததனால் தான் அவர் இந்த நிலைக்கு முன்னேறி இருக்கிறார் என சிலர் கேலியாக பேசுவது உண்டு. அந்த கேலிகளுக்கெல்லாம் நெத்தியடியாக, இந்த வீடியோவில் பதில் கூறிஇருக்கிறார் விஜய். என் பெற்றோர் சினிமா துறையில் இல்லாமல் இருந்திருந்தாலும் நான் நடிகனாகி இருப்பேன், என்பதை அவர் இதில் கூறி இருக்கும் விதம் அசத்தலாக இருக்கிறது.

மேலும் விஜயின் அப்பா மட்டும் அவரை திரைப்படங்களில் நடிக்கவைக்கவில்லை என்றால் , தானே தனது சொந்த முயற்சியில் நடிகனாகி இருப்பேன் என்றும் அந்த வீடியோவில் விஜய் கூறி இருக்கிறார். தன் திரையுலக அறிமுகம் குறித்து விஜய் மனம் திறந்து பேசி இருக்கும் , இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

இலங்கை தமிழனாக மாறிய சசிகுமார் - வைரலாகும் டூரிஸ்ட் பேமிலி டிரெய்லர்
பல கெட்டப்புகளில் சுந்தர்சியுடன் காமெடியில் ரணகளம் பண்ணும் வடிவேலு! 'கேங்கர்ஸ்' ட்ரைலர்!
ரம்ஜான் தினத்தன்று அதிரடி சரவெடியாக வெளிவந்த சர்தார் 2 டீசர்
விக்ரமின் ஆக்ஷன் விருந்து - வைரலாகும் வீர தீர சூரன் டிரெய்லர்
விஜய்யின் நண்பன் இயக்கிய ‘லெக் பீஸ்’ படத்தின் கலகலப்பான டிரைலர்
Sabdham Trailer : திகிலூட்டும் காட்சிகளுடன் வெளியானது சப்தம் டிரைலர்
Suzhal 2 : நெக்ஸ்ட் சம்பவம் லோடிங்; அதகளமாக ரிலீஸ் ஆன சுழல் 2 டிரைலர்
நீதிக்காக போராடும் நாய்; புதுமையான கதைக்களத்துடன் உருவான கூரன் படத்தின் டிரைலர் இதோ
ஒருவேள சூர்ய வம்சம் பார்ட் 2-வா இருக்குமோ? வைரலாகும் 3BHK டீசர்
பழைய படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த ஜெய்; ட்ரோல் செய்யப்படும் பேபி & பேபி டிரைலர் இதோ