BalaKrishna : குடிபோதையில் நடிகை அஞ்சலியிடம் அத்துமீறி நடந்துகொண்டாரா பாலகிருஷ்ணா? பரபரப்பை கிளப்பிய வீடியோ

By Ganesh A  |  First Published May 30, 2024, 9:18 AM IST

கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை அஞ்சலியிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது.


தெலுங்கு திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. 63 வயதிலும் ஹீரோவாக நடித்து வரும் இவருக்கு ஆந்திராவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் என்ன செய்தாலும் அங்குள்ள ரசிகர்கள் ரசிப்பதால், இவரது படங்களில் லாஜிக் என்பதற்கு வேலையே இல்லை. ஒற்றை விரலால் ரயிலை நிறுத்துவது, காரை எட்டி உதைத்து திருப்பி அனுப்புவது என படங்களில் பல அட்ராசிட்டிகளை செய்திருப்பார் பாலகிருஷ்ணா. 

இதன்காரணமாகவே இவர் நடிக்கும் படங்கள் இணையத்தில் அதிகளவில் ட்ரோல் செய்யப்படும். இது ஒருபுறம் இருக்க, அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் பாலகிருஷ்ணா. அண்மையில் நடந்து முடிந்த தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட நடிகை விசித்ரா, பால கிருஷ்ணா படத்தில் நடித்தபோது தான் பாலியல் சீண்டல் பிரச்சனையை எதிர்கொண்டதாக ஓப்பனாகவே கூறி பரபரப்பை கிளப்பினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... TTF Vasan Arrest: மீண்டும் கைதான யூடியூபர் டிடிஎப்.வாசன்.. இந்த முறை எந்த வழக்கில் தெரியுமா?

இந்த நிலையில், தற்போது நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. அந்த வகையில் அஞ்சலி, நாசர், நேஹா ஷெட்டி, விஸ்வாக் சென் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நடிகர் பாலகிருஷ்ணா.

அப்போது அவர் வாட்டர் பாட்டிலில் மது கொண்டு வந்திருந்ததாக கூறி வீடியோ காட்சிகள் சில வெளியாகி வைரலாகின. அதேபோல் மேடையில் அருகில் நின்றுகொண்டிருந்த நடிகை அஞ்சலியை பாலகிருஷ்ணா தள்ளிவிடும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மேடையில் நடிகையிடம் அத்துமீறி நடந்துகொண்ட பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலரோ அவர்மீது ஆக்‌ஷன் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

Balayya Settai 😆🕺🏼 |

pic.twitter.com/jDsm8z2odE

— Tharani ᖇᵗк (@iam_Tharani)

இதையும் படியுங்கள்... சூர்யா 44 படத்துக்காக பிரபல இளம் ஹீரோவை வில்லனாக களமிறக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே

click me!