MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • சூர்யா 44 படத்துக்காக பிரபல இளம் ஹீரோவை வில்லனாக களமிறக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே

சூர்யா 44 படத்துக்காக பிரபல இளம் ஹீரோவை வில்லனாக களமிறக்கும் கார்த்திக் சுப்புராஜ்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள சூர்யா 44 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல இளம் ஹீரோ கமிட்டாகி இருக்கிறாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 30 2024, 08:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya 44

Suriya 44

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து உள்ளது. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக இது உருவாகி இருக்கிறது. தீஷா பதானி ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Suriya 44 Update

Suriya 44 Update

கங்குவா படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் திரைக்கு வர உள்ளது. கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார். நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது படமான இதை 2டி நிறுவனம் தான் தயாரிக்கிறது. காதல் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... எப்போதுமே ஒரு பயம் இருக்கும்! 'மழை பிடிக்காத மனிதன்' டீசரில் இடம்பெற்ற இளையராஜா பாடல்..!

34
Karthik Subbaraj, Suriya

Karthik Subbaraj, Suriya

சூர்யா 44 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் அந்தமானில் தொடங்க உள்ளது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். மேலும் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இந்நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.

44
Suriya, Vijaykumar

Suriya, Vijaykumar

அதன்படி சூர்யா 44 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஜய்குமார் கமிட்டாகி உள்ளாராம். உறியடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய்குமார். இதையடுத்து உறியடி 2, ஃபைட் கிளப், எலெக்‌ஷன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த அவர் தற்போது சூர்யா 44 படம் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக விஜய்குமார் ஹீரோவாக நடித்த உறியடி 2 திரைப்படத்தை நடிகர் சூர்யா தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Nalini : ஏழு ஜென்மம் ஆனாலும் ராமராஜன் தான் எனக்கு கணவரா வரணும்... இப்பவும் லவ் பண்றேன் - மனம்திறந்த நளினி

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved