புயலில் காரை பரிகொடுத்த நடிகர் கூல் சுரேஷுக்கு சேலம் ஆர்.ஆர். தமிழ்ச் செல்வன் கார் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த கூல் சுரேஷை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது சோசியல் மீடியா தான். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்துக்காக இவர் செய்த வித்தியாசமான புரமோஷன் தான் அவரை மக்கள் மத்தியில் ரீச் ஆக்கியது. பின்னர் சோசியல் மீடியாவில் பாப்புலரான கூல் சுரேஷுக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதன்படி நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் கூல் சுரேஷ்.
அந்நிகழ்ச்சிக்கு சென்ற பின்னர் ஆளே டோட்டலாக மாறிய அவர் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கூல் சுரேஷுக்கு பிரபலம் ஒருவர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த ஆண்டு சென்னையில் நிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
இதையும் படியுங்கள்... குளிருதே வெயில்; குமுறுதே குயில்! இந்தியன் 2 படத்துக்காக அனிருத் போட்ட செம மெலடி பாட்டு ‘நீலோர்பம்’ ரிலீசானது
அந்த சமயத்தில் கூல் சுரேஷின் காரும் அதில் சிக்கி சேதமானதாம். அந்த சமயத்தில் கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால் அவரால் காரை காப்பாற்ற முடியாமல் போனதாம். அதன்பின்னர் கார் இல்லாமல் எங்கு சென்றாலும் ஆட்டோவையே பயன்படுத்தி வந்தாராம் கூல் சுரேஷ். இந்த தகவல் அறிந்த சேலம் ஆர்.ஆர் பிரியாணி கடை உரிமையாளர் தமிழ்செல்வன் கூல் சுரேஷை நேரில் பார்க்க அழைத்துள்ளார்.
அப்போது ஆட்டோவில் வந்த கூல் சுரேஷுக்கு தன்னிடம் இருந்த கார் ஒன்றை பரிசாக வழங்கி அவரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறார் கூல் சுரேஷ். அந்த கார் சாவியை கையில் வாங்கியதும் தமிழ்ச்செல்வனுக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் தன் ஸ்டைலில் நன்றிகளை தெரிவித்துள்ளார் கூல் சுரேஷ். இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கூல் சுரேஷுக்கு கார் பரிசளித்த சேலம் ஆர்.ஆர் தமிழ்ச்செல்வன் pic.twitter.com/cXzbHe93Xm
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதையும் படியுங்கள்... IMDb வெளியிட்ட தசாப்தத்தின் டாப் 100 ஸ்டார்ஸ் லிஸ்ட்... கெத்து காட்டிய நயன், சமந்தா.. கடைசி இடத்தில் அஜித்!