- Home
- Gallery
- IMDb வெளியிட்ட தசாப்தத்தின் டாப் 100 ஸ்டார்ஸ் லிஸ்ட்... கெத்து காட்டிய நயன், சமந்தா.. கடைசி இடத்தில் அஜித்!
IMDb வெளியிட்ட தசாப்தத்தின் டாப் 100 ஸ்டார்ஸ் லிஸ்ட்... கெத்து காட்டிய நயன், சமந்தா.. கடைசி இடத்தில் அஜித்!
கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் அதிகம் பேசப்பட்ட டாப் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலை ஐஎம்டிபி தளம் வெளியிட்டு இருக்கிறது.

IMDb top 100 Indian Stars of the Decade
சர்வதேச அளவில் வெளியாகும் படங்களை தர மதிப்பீடு செய்யும் நிறுவனம் தான் ஐஎம்டிபி. சினிமாவின் விக்கிபீடியா என்று அழைக்கப்படும் இந்நிறுவனம், தற்போது கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் அதிகம் பேசப்பட்ட டாப் 100 இந்திய நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் ஒரு தமிழ் சினிமா பிரபலங்கள் கூட இடம்பெறவில்லை. இந்த பட்டியலில் முதலிடத்தை தீபிகா படுகோனே பிடித்திருக்கிறார். இதற்கு அடுத்த படியாக ஷாருக்கான் இரண்டாம் இடத்திலும், ஐஸ்வர்யா ராய் 3ம் இடத்திலும் உள்ளார்.
IMDb top 100 Indian Stars of the Decade
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் இந்த பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளார். தமிழ் சினிமா பிரபலங்களை பொருத்தவரை நடிகைகள் தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றனர். நடிகை சமந்தாவுக்கு 13வது இடமும், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 18-வது இடமும் கிடைத்திருக்கிறது. நடிகை தமன்னா 16-வது இடத்தில் உள்ளார். அதேபோல் பான் இந்தியா ஹீரோவாக வலம் வரும் பிரபாஸ் இந்த பட்டியலில் 29வது இடத்தில் உள்ளார்.
இதையும் படியுங்கள்... குளிருதே வெயில்; குமுறுதே குயில்! இந்தியன் 2 படத்துக்காக அனிருத் போட்ட செம மெலடி பாட்டு ‘நீலோர்பம்’ ரிலீசானது
IMDb top 100 Indian Stars of the Decade
தமிழ் சினிமா நடிகர்களை பொறுத்தவரை தனுஷ் தான் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 30-ம் இடம் கிடைத்துள்ளது. இவருக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் 35வது இடத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 42-வது இடத்திலும் உள்ளார். பான் இந்தியா அளவில் பிசியான நடிகராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ரஜினிக்கு அடுத்தபடியாக 43-வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் நடிகர் மாதவனுக்கு 50-வது இடம் கிடைத்திருக்கிறது.
IMDb top 100 Indian Stars of the Decade
உலகநாயகன் கமல்ஹாசன் 54-வது இடத்திலும், அவரது மகள் ஸ்ருதிஹாசன் 58-வது இடத்திலும் உள்ளனர். நடிகர் சூர்யாவுக்கு இந்த பட்டியலில் 62வது இடம் கிடைத்துள்ளது. நடிகை ராஷ்மிகா 78-வது இடத்திலும், திரிஷா 84-வது இடத்திலும், அனுஷ்கா ஷெட்டி 86-வது இடத்திலும் உள்ளார். சீயான் விக்ரமுக்கு இந்த பட்டியலில் 92-வது இடமும், நடிகர் அஜித்குமாருக்கு 98-வது இடமும் கிடைத்திருக்கிறது. நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் 100-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... தெலுங்கு நடிகரின் மகளைத் திருமணம் செய்கிறரா சிம்பு? புதுசா கிளம்பிய வெட்டிங் அப்டேட்!