பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!

By manimegalai a  |  First Published Jul 29, 2022, 12:51 PM IST

பிரபல மராத்தி நடிகர் அரவிந்த் தானு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மேடையிலேயே மழுங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


47 வயதாகும் அரவிந்த் தானு, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், சில மராத்தி படங்களிலும் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் இவர் மும்பையில் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது திடீர் என நெஞ்சு வலி மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக மயங்கி கீழே விழுந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த அரவிந்த் தானுவை அங்கிருந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். 

ஆனால் அரவிந்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இறுதியாக அவர் பெருமூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது இந்த திடீர் மறைவு, மராத்தி சீரியல் நட்சத்திரங்கள் மற்றும் திரையுலக நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: நயன்தாரா வெடிங் ஸ்டைலை... காபி அடித்த கீர்த்தி சுரேஷ்! சும்மா தங்க சிலை மாதிரி ஜொலிக்கும் போட்டோஸ்..!
 

அரவிந்த் தானு, 'சுக் ம்ஹஞ்சே நக்கி கே அஸ்டா' என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த தொடரில் அவர் ஒரு அரசியல்வாதியாகவும், கதாநாயகியின் தந்தையாகவும் நடித்து வந்தார். இவரின் எதார்த்தமான நடிப்பு அனைவர் மத்தியிலும் மிகவும் பாராட்டை குவித்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி வாழ்க்கையில் வந்த ரியல் ஜானு..! பிளாஷ்பேக் பள்ளி காதலை முதல் முறையாக கூறி உருக்கம்!
 

இந்த தொடரை தவிர அரவிந்த் தானு பல குறிப்பிடத்தக்க தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றியுள்ளார். அவர் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடத்தில் நடித்தும் உள்ளார். குறிப்பாக லேக் மஜி லட்கி, சுக் மஞ்சே நக்கி கே அஸ்டா மற்றும் கிரைம் பேட்ரோல் ஆகிய தொலைக்காட்சி தொடர்கள் இவர் நடிப்பில் வெளிவந்து மிகவும் பிரபலமானவை. மராத்தி திரைப்படமான ஏக் ஹோதா வால்யாவிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது திடீர் மரணம் தற்போது மராத்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!