வந்திய தேவனின் ஆடிகொண்டாட்டமாக வெளியாகும்... 'பொன்னி நதி' முதல் சிங்கிள்! படக்குழு வெளியிட்ட தகவல்!

Published : Jul 28, 2022, 08:55 PM IST
வந்திய தேவனின் ஆடிகொண்டாட்டமாக வெளியாகும்... 'பொன்னி நதி' முதல் சிங்கிள்! படக்குழு வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

'பொன்னியின் செல்வன்' படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

இயக்குனர் மணிரத்தினம் இயக்க வேண்டும் என பல வருடங்களாக கனவு கண்ட திரைப்படம் தான்  'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படம்  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதால் படத்தின் புரோமோஷன் பணிகள் ஒருபுறம் துரிதமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே இந்த  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில்... டீசரில் வந்த ஒவ்வொரு காட்சியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இருந்தது. அதிலும் குறிப்பாக... குந்தவை - நந்தினி இன்ட்ரோ சீன்... வேற லெவலுக்கு இருந்ததாக கூறினர் ரசிகர்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்தினம் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் உடல் நலம் தேறி, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அதே போல் அவ்வப்போது படம் குறித்த சில அப்டேட் கொடுத்து வரும் 'பொன்னியின் செல்வன்' படக்குழு... இப்படத்தில் வரும் பெயர் முதல், ஓவ்வொரு விஷயத்தையும் எந்த அளவிற்கு அலசி ஆராய்ந்து எடுத்துள்ளனர் என்பது, அண்மையில் வெளியான 'அருண்மொழி வர்மன்' குறித்து விவரித்து கூறும் வீடியோ மூலம் தெரியவந்தது.

இதை தொடர்ந்து மற்றொரு சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது... இதுகுறித்து தற்போது 'பொன்னியின் செல்வன்' வெளியிட்டுள்ள போஸ்டரில், 'வந்திய தேவனின் ஆடிகொண்டாடம்' என்றும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னியின் நதி முதல் சிங்கிள் பாடல் ஜூலை 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்