Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..

By Kanmani P  |  First Published Jul 28, 2022, 3:18 PM IST
Dhanush birthday : தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில் தனுஷ் பியானோ இசைக்கருவியை அழகாக மீட்டுகிறார்.

தேசிய விருது நாயகன் தனுஷ் தனது 38 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி பிறந்தார் தனுஷ். இவரின் தந்தை கஸ்தூரிராஜா மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் இருவரும் பிரபல இயக்குனர்கள். முன்னதாக தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை என்னும் படத்தில் மூலம் அறிமுகமானார் தனுஷ். 

கடந்த 2022 ஆம் ஆண்டு திரையுலைகளுக்குள் நுழைந்த இவர் கடுமையான விமர்சங்களுக்கும் , கேலிகளுக்கும் ஆளானார்.  மிகவும் ஒல்லியாக இருந்த தனுஷின் உருவம் குறித்து பலரும் கேள்வி கிண்டல் செய்தனர்.  கேலி கிண்டல்களை கடந்து தற்போது தேசிய விருது வென்ற முன்னணி நாயகனாக திகழ்ந்து வருகிறார் தனுஷ்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு....ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்.

 தமிழில் மட்டுமல்லாமல் ஹாலிவுட், டோலிவுட் , பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது தனது அண்ணனின் இயக்கத்தில்  நானே ஒருவன், அதோடு திருச்சிற்றம்பலம், தெலுங்கில் வாத்தி ஹாலிவுட்டில் தி கிரே மேன் உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.  இதில் க்ரே மேன் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் எதிர் நாயகனாக வந்திருந்தார் தனுஷ்.

மேலும் செய்திகளுக்கு...dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?

இதற்கு இடையே ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் கரம் பிடித்த தனுஷ் சமீபத்தில் இந்த 18 ஆண்டு திருமண பந்தம் முறிவது குறித்த தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்திருந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. 

அவ்வப்போது பிரபல நிகழ்ச்சிகளில் தனது மகன்களுடன் காட்சியளிக்கிறார் தனுஷ். க்ரே மேன் ப்ரோமோஷன் மற்றும் சிறப்பு காட்சியின் போது தனது மகன்களுடன் தனுஷ் வந்திருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகின.  நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர் பாடகராகவும் இருந்து வரும் தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில் தனுஷ் பியானோ இசைக்கருவியை அழகாக மீட்டுகிறார்.

மேலும் செய்திகளுக்கு..சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.

இசையமைப்பாளராக மாறிய தனுஷ்.... pic.twitter.com/J1yb9zLi47

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

 

click me!