ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்..
அவ்வப்போது பிகினி, கிளாமர் உடை உள்ளிட்டவற்றில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் ராய் லட்சுமி தற்போது பச்சை நிற லோ நெக் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
Raai Laxmi Latest Photoshoot
விளம்பர மாடலாக இருந்த லட்சுமி ராய் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் உதயகுமாரின் கன்னட குறும்படத்தில் தோன்றியிருந்தார். பின்னர் இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது. கற்க கசடற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இந்த படத்தையும் ஆர்வி உதயகுமார் தான் இயக்கி இருந்தார். இருந்தார் இதில் விக்ராந்த நாயகனாக நடித்திருந்தார்.
இதையடுத்து குண்டக்க மண்டக்க படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராய் லட்சுமி. பின்னர் பேரரசு, தர்மபுரி,நெஞ்சைத் தொடு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக தோன்றியிருந்த ராய் லட்சுமி.
மேலும் செய்திகளுக்கு...dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?
Raai Laxmi Latest Photoshoot
பின்னர் கன்னடம், தெலுங்கு, மலையாள என பல மொழிகளில் வாய்ப்புகளை தேடி சென்று விட்டார். 2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில் பிரியாவாக நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அரண்மனை படத்தில் நடித்திருந்த ராய் லட்சுமி கடந்த ஆண்டு சிண்ட்ரெல்லா என்னும் திரில்லர் படத்தில் துளசி, அகிரா என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். வினோ வெங்கடேஷ் என்பவர் எழுதி இயக்கி இருந்த இந்த படம் ஹாரர் மூவியாக வெளியாகி இருந்தது. இது சாக்ஷி அக்ரவால், உஜ்ஜயினி ராய், ரோபோ சங்கர் உளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மேலும் செய்திகளுக்கு..சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.
Raai Laxmi Latest Photoshoot
தற்போது கன்னடத்தில் ஜான்சி ஐபிஎஸ், தெலுங்கில் ஆனந்த பைரவி, தமிழில் கேங்ஸ்டர் 21 உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ள ராய் லட்சுமி, தொலைக்காட்சி தொடர்களிலும் தோன்றியுள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சின்னத்திரைகள் ரியாலிட்டியில் தோன்றியுள்ளார். அதோடு வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் ராய் லட்சுமி.
மேலும் செய்திகளுக்கு....தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..
Raai Laxmi Latest Photoshoot
அவ்வப்போது பிகினி, கிளாமர் உடை உள்ளிட்டவற்றில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் ராய் லட்சுமி தற்போது பச்சை நிற லோ நெக் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். வழக்கத்திற்கு மாறாக முழு உடை அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.