
இந்தியாவில் முதல்முறையாக சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. மாமல்லபுரத்தில் இன்று துவங்கிய இந்த போட்டி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இந்த போட்டிகள் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இந்த போட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் கடந்த 19ஆம் தேதி செஸ் ஒலிம்பியாடீ ஜோதியை பிரதமர் துவங்கி வைத்தார். இந்த ஜோதி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களைக் கடந்து சென்னை வந்தடைந்தது.
மேலும் செய்திகளுக்கு...Dhanush birthday special : அதிக வசூலை பெற்று பிளாக்பாஸ்டர் ஹிட் அடித்த தனுஷ் படங்கள்...
இன்று நடைபெறும் இந்த போட்டியை ஒட்டி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளில் இருந்து போட்டியாளர்கள் சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்காக 3500 மேற்பட்ட உணவு வகைகள் கொண்ட மெனு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ ஆர் ரகுமான் நம்ம சென்னை என்கிற ஆந்தம் வீடியோவை உருவாக்கி இருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள செஸ் தொடர்பான தீம் மியூசிக் ஆல்பம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...the legend : தி லெஜண்ட் படத்தை ஏன் பார்க்க வேண்டும்... 5 காரணங்கள் இதோ!
ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதை இன்று மாலை சென்னை வருகிறார் பிரதமர். கோலாகலமாக துவங்கியுள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகைகள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தனது வாழ்த்து பதிவில் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு அனைத்து செஸ் வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என போட்டியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு....தி லெஜண்ட் ரிலீஸ்...4 மாவட்ட விடுமுறை..கொண்டாட்டத்தில் சரவணன் அருள்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.