
கோலிவுட், திரையுலகை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என அசத்தி வரும் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்துள்ள திரைப்படம் 'வாத்தி'. இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு திரையுலகிலும் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வரும் வருகிறது. 'வாத்தி' படத்தில் தனுஷ் இதுவரை ஏற்று நடித்திராத ஆசிரியர் வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்: சண்டை காட்சியில் விழுந்து வாரி விபத்திற்குள்ளான நடிகை சம்யுக்தா ஹெக்டே..!
குறிப்பாக இந்த டீசரில், கல்வி வியாபாரம் செய்யப்படுவது குறித்து பேசப்பட்டுள்ளது. டீச்சரின் ஆரம்பத்திலேயே... "ஸீரோ பீஸ் ஸீரோ எஜிகேஷன்... மோர் பீஸ் மோர் எஜிகேஷன்" என கூறப்படுகிறது. பின்னர் தனுஷ் பேசும் பன்ச் படு மாஸ்... படிப்பை பிரசாதம் மாதிரி கொடுங்க, 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்பனை செய்யாதீர்கள் என கூறுகிறார். அதே போல் ஆசிரியர்கள் கூட தரம் பிரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்படுவது போன்ற கட்சிகளும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த டீசரில் வரும், சண்டை காட்சியில்... பாரதியார் வேடத்தில் ஆக்ஷனில் பிரித்து மேய்கிறார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள, 'வாத்தி' பட டீசர் தற்போது தனுஷ் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: என் மகன் அதிகம் கஷ்டப்பட்டுருக்கான்... அசிங்கப்பட்டிருக்கான்..! தனுஷ் பற்றி பேசி மேடையில் கலங்கிய கஸ்தூரி ராஜா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.