
தனுஷ் பல்வேறு விமர்சனங்களோடு திரையுலகில் அடியெடுத்து வைத்தாலும், இன்று கோலிவுட் திரையுலகை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என பல முன்னணி நடிகர்கள் எட்ட முடியாத சிகரத்தை தொட்ட நடிகராக மாறியுள்ளார். அது மட்டும் இன்றி சக்ஸர்ஸ் ஃபுல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படி பல்வேறு திறமைகளோடு இருக்கும் தனுஷ் பியானோ வாசிப்பதிலும் கில்லாடி என்பதை நிரூபித்துள்ளது தற்போது நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள வீடியோ.
தனுஷ் பியானோ வாசிக்கும் வீடியோவை நடிகர் பிரசன்னா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து தனுஷின் ரசிகர்கள், தனுஷுக்குள் இப்படி ஒரு அபார திறமையும் ஒளிந்துள்ளதா? என ஆச்சர்யத்துடன் பார்த்து வருவது மட்டும் இன்றி அவருக்கு தங்களின் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் இருந்து நேற்றே 3 ஆவது சிங்கிள் பாடலான 'லைப் ஆப் பழம்' பாடல் வெளியான நிலையில், இன்று மாலை 6 மணிக்கு, இவர் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.