
பாலிவுட்டில் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற லைஃப் ஆஃப் பை, பிகு, லன்ச் பாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இர்ஃபான் கான். ஹாலிவுட்டில் கூட அமேசிங் ஸ்பைடர்மேன், ஜூராஸிக் வேர்ல்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிகிச்சைக்காக இர்ஃபான் கான் லண்டன் சென்றிருந்த சமயத்தில் அவரது வீட்டில் ஏற்பட்ட சோக நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க சமூக விலகல் ஒன்றே ஒரே வழியாகும். அதனால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: துளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...!
இந்நிலையில், இர்ஃபான் கானின் தாய் சயீதா பேகம் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். 95 வயதான சயீதா பேகம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசித்து வந்துள்ளார். வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சயீதா பேகம் நேற்று காலமானார். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக லண்டனில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தாயின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாத சூழ்நிலையில் நடிகர் இர்ஃபான் சிக்கிக்கொண்டார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தட்டித்தூக்க பக்கா பிளான்... பெண்களுக்கு “திரெளபதி” இயக்குநர் வைத்த கோரிக்கை...!
இதையடுத்து நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற தாய் சயீதா பேகத்தின் இறுதிச்சடங்கை இர்ஃபான் கான் வீடியோ காலில் பார்த்து கதறி அழுதுள்ளார். இச்சம்பவம் பாலிவுட் பிரபலங்களையும், நடிகர் இர்ஃபான் கான் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இர்ஃபான் கானின் அம்மா மரணத்திற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.