ராகவா லாரன்ஸின் அடுத்த அதிரடி... ஊரடங்கால் அவதியுறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் உதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 26, 2020, 5:15 PM IST
Highlights

இதேபோல் கொரோனா ஊரடங்கால் அவதியுறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக முதற்கட்டமாக 50 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பணம் செலுத்தியுள்ளார். 

கொரோனா வைரஸின் திடீர் பாதிப்பால் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கூலி வேலை செய்பவர்கள் முதல், தொழிலதிபர்கள் வரை ஏதோ ஒரு விதத்தில் சரிவை சந்தித்துள்ளனர்.ஏப்ரல் மாதத்தோடு அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும் என நினைத்த பலருக்கும், மே 3 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடித்தது ஏமாற்றம் தான் என்றாலும், தற்போது தமிழகத்தில் நிலவி வரும் சூழலுக்கு இந்த ஊரடங்கு தேவை என்பதும் பலருடைய கருத்தாகவும் உள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சினிமா கலைஞர்களுக்கு, பலர் உதவி வரும் நிலையில்... நடிகர் ராகவா லாரன்ஸ் எடுத்ததுமே 3 கோடி நிதி உதவியை அளித்தார். 

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், நடன கலைஞர்கள் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்காக ரூ.75 லட்சம் என முதற்கட்டமாக 3 கோடி ரூபாயை ஒரே தடவையில் அறிவித்து, தமிழக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதை தொடர்ந்து பல உதவிகளை செய்ய உள்ளதாக தெரிவித்து வந்த ராகவா, அடுத்ததாக தான் நடிக்க உள்ள படம் மூலம் கிடைத்த தனது சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சத்தை தூய்மை பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த உள்ளதாக அறிவித்தார்.  இதை தொடந்து, சென்னை - செங்கல்பட்டு விநோயோகஸ்தர் சங்கத்திற்கு ரூபாய்.15 லட்சம் நிதி உதவி வழங்கினார். 

நலித்த நடிகர்கள் மற்றும் நாடக கலைஞர்களுக்கு உதவும் விதமாக தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி செய்தார். மீண்டும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் அளித்த  ராகவா லாரன்ஸ், அதனை சென்னை வளசரவாக்கம், கோடம்பாக்கம், வடபழனி பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக நிதி உதவி செய்தார். 

இப்படி அடுத்தடுத்து உதவிகளால் திணறடித்து வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நலிந்த நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். நலிந்த நடன கலைஞர்களுக்காக 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை ஒதுக்கியுள்ளார். அதை மிகவும் கஷ்டப்படும் 23 நடன கலைஞர்களின் வங்கி கணக்கில் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த 10 பேருக்கும், சென்னையைச் சேர்ந்த 13 பேருக்கும் நிதி உதவி அளித்துள்ளார். 

இதேபோல் கொரோனா ஊரடங்கால் அவதியுறும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் விதமாக முதற்கட்டமாக 50 பேரின் வங்கி கணக்கில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் பணம் செலுத்தியுள்ளார். ஊரடங்கு காலத்தில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் ராகவா, தன்னால் முடிந்த அனைவருக்கும் உதவிகளை வாரி வழங்கிவருகிறார். 

click me!