புதுமையாக யோசித்த விஜய் தேவரகொண்டா... கொரோனா நிவாரணத்திற்கு ரூ.1.30 கோடி நிதி உதவி...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 26, 2020, 4:35 PM IST
Highlights

இந்நிலையில் ரூ.1.30 கோடி நிவாரண உதவியை அறிவித்துள்ள விஜய் தேவரகொண்டா அதற்காக இரண்டு அறக்கட்டளைகளையும் உருவாக்கியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் இளம் நாயகர்களில் டாப் ஸ்டாராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாடிக்க ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றார். கோடிகளில் சம்பளம் வாங்கி குவிக்கும் விஜய் தேவரகொண்டா கொரோனா பிரச்சனைக்கு நிதி கொடுக்காமல் இருப்பது பெரும் சர்ச்சைகளை எழுப்பியது. 

இந்நிலையில் ரூ.1.30 கோடி நிவாரண உதவியை அறிவித்துள்ள விஜய் தேவரகொண்டா அதற்காக இரண்டு அறக்கட்டளைகளையும் உருவாக்கியுள்ளார்.அதில் ஒன்றின் மூலம் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி செய்யப்படும். அதற்காக 25 லட்சம் ஒதுக்கியுள்ளார், அதன் மூலம் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த உதவியை பெற சம்பந்தப்பட்ட நபர்கள் அறக்கட்டளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். 

2 Big Important Announcements! ❤️🤗https://t.co/5n1pnJRCae

Full details at https://t.co/AzYE7kSgsJ pic.twitter.com/MVzFbdlXzP

— Vijay Deverakonda (@TheDeverakonda)

மற்றொரு தொண்டு நிறுவனத்திற்கு விஜய்தேவரகொண்டா பவுண்டேஷன் என்று பெயர் வைத்துள்ளார். அதன் மூலம் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு வேலை இழந்து தவிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக www.thedeverakondafoundation.org என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். படங்களை தேர்வு செய்வதில் மட்டுமல்ல, உதவுவதிலும் கூட மாத்தி புதுமையாக யோசிக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் கொரோனா நிவாரணத்திற்கு உதவ விரும்புவோர் தங்களது அறக்கட்டளைக்கு நிதி அளிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார். 
 

click me!