“கிரேஸி ரிச் ஏசியன்ஸ்” படத்தில் ஹீரோவாக நடித்த அமெரிக்க நடிகர் நிகா சன்டோஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஏழை, பணக்காரன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி சகலரையும் வாட்டி வதைக்கிறது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்ஸ் மற்றும் அவரது மனைவி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கொரோனாவின் கோர பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!
இந்நிலையில் “கிரேஸி ரிச் ஏசியன்ஸ்” படத்தில் ஹீரோவாக நடித்த அமெரிக்க நடிகர் நிகா சன்டோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.
A post shared by Nico Santos (@nicosantos) on Mar 28, 2020 at 10:21pm PDT
இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!
ஆம்... அதில், “எனது தந்தை டிடோ சோனி நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். என் அம்மாவும் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். எனது குடும்பமே சிதைந்துவிட்டது. என்னால் என் அப்பாவின் இறுதி நாட்களில் கூட உடன் இருக்க முடியவில்லை. அவரது கடைசி காலத்தில் கைகளை பிடித்து ஆறுதல் சொல்ல கூட முடியவில்லை, எனது சகோதர்களின் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க கூட என்னால் முடியவில்லை” என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.