
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஸ்டைலிஷ் இங்கிலீஷ் பேசும் தொகுப்பாளராகவும், குணச்சித்திர நடிகையாகவும் அனைவராலும் அறியப்பட்டவர் வி.ஜே ரம்யா. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ஓகே கண்மணி', 'கேம் ஓவர்', 'வனமகன்', 'ஆடை ' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தளபதி விஜய்யை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள, 'மாஸ்டர்' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த திரைப்படம், 144 தடை காரணமாக மற்றொரு ரிலீஸ் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமா, வீட்டிலேயே இருக்கும் ரம்யா, மிகவும் சோகமான பதிவை போட்டுள்ளார். இவர் கடந்த 8 வருடங்களாக 'மிலோ' என்கிற நாய் ஒன்றை வளர்த்து வந்தார். கடந்த சில வாரங்களாக உடல் நலமின்றி இருந்த அவருடைய செல்ல நாய் இறந்து விட்டதாக மனதை உருக்கும் பதிவை போட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ளதாவது.... " இந்த தேசமே ஒன்று சேர்ந்து, ஒரு தொற்று நோய் வைரஸுடன் போராடிக்கொண்டிருக்கும்போது, என் மிலோ கடுமையான நோயுடன் போராடி கொண்டிருந்தான்.
ஒன்றின் பின் ஒன்றாக பல அறுவை சிகிச்சைகள் நடந்தது. ஆனால் இறுதியாக உலகத்தை விட்டு போய்விட்டான். இந்த நாட்களில் அவனின் நிலையை கண்டு, நான் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். என்னால் வெளிப்படுத்த முடியவில்லை அது பற்றி. மிகுந்த வேதனையாக உணர்கிறேன்.
வெறுமையாக உணர்கிறேன், என்னில் ஒரு பகுதி போய்விட்டது போல் தோன்றுகிறது. எனக்கு நிபந்தனையற்ற அன்பை அதிகமாகக் கொடுத்தவர் இனி இல்லை.
கடந்த 3 வாரங்களாக அவன் குணமடைய பிரார்த்தனை செய்துகொண்டிருந்த எனது நண்பர்களுக்கு நன்றி.
என் மிலோ, என் குழந்தை, என் அன்பே, என் எல்லாமே அவன்தான். எந்த மனிதனும் கொடுக்க முடியாத அன்பையும், மகிழ்ச்சியையும் தந்தாய். என்னை பாதுகாத்துக்கொண்டிருந்தாய். மீண்டும் என வாழ்க்கையில் நீ வருவாய் என்கிற நம்பிக்கை உள்ளது என, மன வேதனையோடு ரம்யா இந்த ட்விட்டை போட்டிருக்கிறார். மேலும் பலர் ரம்யாவிற்கு தங்களுடைய ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.