
நடிகர் விஷ்ணு விஷால், முதல் மனைவி ரஜினியை விவாகரத்து செய்த பின், தற்போது பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வருகிறார்.
இந்த வருட காதலர் தினத்தில், இவர்கள் இருவரும் மிகவும் சந்தோஷமாக கொண்டாடினர். அப்போது இவர்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் சந்தித்து தங்களுடைய காதலை வளர்த்து வருகிறார்கள். குறிப்பாக அடிக்கடி இருவரும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்க கூடாது என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் ஜுவாலா கட்டா தற்போது ஹைதராபாத்திலும் நடிகர் விஷ்ணு விஷால் சென்னையிலும் அவரவர் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இதனால் ஜுவாலா கட்டா விஷ்ணுவிஷால் மீதுள்ள காதல் அதிகரிக்க அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாக ட்விட் ஒன்றை போட்டுள்ளார். இதையடுத்து இதற்கு பதில் கொடுத்துள்ள விஷ்ணு விஷால் தற்போது சோசியல் டிஸ்டன்ஸ் மிகவும் முக்கியம் என தன்னுடைய காதலியிடம் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதில் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.