இந்த விஷயத்தில் அஜித்தை முந்திட்டாரா விஜய்? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்... கடுப்பில் தல ரசிகர்கள்! ஏன்...

Published : Jun 17, 2021, 04:18 PM IST
இந்த விஷயத்தில் அஜித்தை முந்திட்டாரா விஜய்? உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்... கடுப்பில் தல ரசிகர்கள்! ஏன்...

சுருக்கம்

தளபதி 65 படம் குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ஒன்று விஜய் ரசிகர்களை உட்சாக படுத்தியுள்ளது. இந்த தகவலால் தல ரசிகர்கள் சற்று அப்செட் என்றே சொல்லலாம்.  

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்து வரும், 65 ஆவது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. கொரோனா இரண்டாவது அலைக்கு பிறகு படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்காக பிரதியாக செட் அம்மைக்கும் பணி ஏற்கனவே துவங்கப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: '24 ஆம் புலிகேசிக்காக' தயாரான வடிவேலு... முக்கிய பிரபலத்தால் முடிவுக்கு வந்த பிரச்சனை! அசத்த வரும் வைகை புயல்!
 

கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் முதல் முதலாக விஜய்யை வைத்து 'தளபதி 65 ' ஆவது படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார், மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7-ந்தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. சுமார் 15 நாட்களுக்கு மேல் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் சுமார் 30 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி, வரும் ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படுவதை ஒட்டி, தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த தகவல் விஜய் ரசிகர்களை உட்சாகமடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: குட்டை டவுசரில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வேற லெவல் யோகா..! வைரலாகும் வீடியோ..!
 

அதே நேரத்தில், பல மாதங்களாக 'வலிமை' அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள், அஜித்தின் பிறந்தநாளில்அவரது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என காத்திருந்த போதும், கொரோனா காரணமாக ஃபர்ஸ்ட் லுக் தாமதமாக வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்தார். எனவே பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. 

மேலும் செய்திகள்: பிக்பாஸ் வனிதாவுக்கு நடிகர் சஞ்சீவுக்கும் இடையே ஒரு உறவு முறையா? இதுநாள் வரைக்கும் தெரியாம போச்சே..!
 

ஆனால் ஏப்ரல் மாதம் துவங்கிய விஜய்யின் 65 பட ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது ... அஜித் ரசிகர்களுக்கு சற்று கவலை அளிக்கும் தகவல் என்றே கூறலாம். அதே போல் தளபதி 65 படத்தில் ஃபர்ஸ்ட் லுக் குறித்து இதுவரை அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில்... என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு