
தமிழ் சினிமாவில், கதாநாயகியாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து கபடி விளையாடி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தன்னுடைய ஃபிட்டிங் ரகசியத்தை வெளிப்படுத்தும் விதமாக இவர் குட்டை டவுசரில் யோகா செய்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: பிக்பாஸ் வனிதாவுக்கு நடிகர் சஞ்சீவுக்கும் இடையே ஒரு உறவு முறையா? இதுநாள் வரைக்கும் தெரியாம போச்சே..!
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் கலவையான கேரக்டர் தேர்வுகள் இவருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து அசத்தி வருகிறார். கதாநாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீக காலமாக இவருடைய நடிப்பு தெலுங்கு திரையுலக ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்: மீண்டும் தனி விமானத்தில் பறந்த நயன் - விக்னேஷ் சிவன்! கைகோர்த்துக் கொண்டு காதல் பயணம் சென்றது எங்கு தெரியுமா?
நடிப்பை தாண்டி சேவ் சக்தி என்கிற அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் தெருக்களில் வசித்து வரும் நாய்கள், பூனைகள், போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு தன்னுடைய அமைப்பு மூலம் உணவளித்து வருகிறார். சமீபத்தில் கூட, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை சந்தித்து, விலங்குகளுக்கான சுமார் 2 டன் உணவு வழங்கினார். இவரது செயல் பலரது மத்தியிலும் பாராட்டை பெற்றது.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி தன்னுடைய யோகா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.... அந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.