அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தமிழ் பட ஹீரோ கொரோனாவால் திடீர் மரணம்..!

Published : Jun 17, 2021, 10:55 AM IST
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தமிழ் பட ஹீரோ கொரோனாவால் திடீர் மரணம்..!

சுருக்கம்

கொரோனா தொற்று காரணமாக, மற்றொரு தமிழ் பட ஹீரோ உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கொரோனா தொற்று காரணமாக, தமிழ் பட ஹீரோ உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரையும், சில திறமையான பிரபலங்களின் உயிர்களையும் பலி வாங்கி வருகிறது. இயக்குநர் கேவி ஆனந்த், இயக்குனர் தாமிரா, நடிகர் பாண்டு, நிதீஷ் வீரா, நடிகர் மாறன் என டாயுதடுத்து பலர் உயிரிழந்த நிலையில்,  தற்போது மற்றொரு இளம் நடிகரும், தயாரிப்பாளருமான, ஷமன் மித்ரு மரணமடைந்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' பாலா... 10 ஆம் வகுப்பில் இவ்வளவு மார்க் எடுத்த மாணவரா? ஆச்சர்ய தகவல்..!
 

தமிழில் கிராமத்து கதையம் கொண்ட படமாக வெளியாகி, விமர்சனம் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'தொரட்டி' . இந்த படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்தவர் ஷமன் மித்ரு. இவர்  இன்று காலை கொரோனாவுக்கு உயிரிழந்ததாக வெளியாகியிருக்கும் தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: ராஷ்மிகா செம்ம ஹாட் போஸ்... முழு கால்களும் தெரியும் அளவிற்கு கவர்ச்சி அட்ராசிட்டி..!
 

கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டிருந்த நடிகர் ஷமன் மித்ரு, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பளீச் கலர் பாவாடை தாவணியில்... லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பவி போட்டோஸ்...!
 

'தொரட்டி' படத்தில் தயாரிப்பாளர் என்பதை கடந்து, ஒரு சிறந்த நடிகராகவும் ஷமன் மித்ரு பார்க்கப்பட்டார். இவருடைய நடிப்பு திறமையை பார்த்து, சில இயக்குனர்கள் இவரை வைத்து படம் எடுக்க முன்வந்து கதை கூறிவந்த நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி