போதை மருந்து பயன்படுத்திய தமிழ் நடிகை காதலருடன் கைது..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

Published : Jun 16, 2021, 06:20 PM IST
போதை மருந்து பயன்படுத்திய தமிழ் நடிகை காதலருடன் கைது..! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

சுருக்கம்

மும்பையின் ஜுஹூவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கஞ்சா உபயோகித்ததற்காக நடிகை மற்றும் அவரது காதலரையும் போதை பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

மும்பையின் ஜுஹூவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கஞ்சா உபயோகித்ததற்காக நடிகை மற்றும் அவரது காதலரையும் போதை பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: திருமண ஆசையை வெளிப்படுத்திய ரசிகர்... பிரியா பவானி ஷங்கரின் எதிர்பாராத பதில்..! இப்படி சொல்லிட்டாங்களே..!
 

தமிழில் 'மிருகா' மற்றும் பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நைரா ஷா, இவர் தன்னுடைய காதலர் ஆஷிக் சஜித் ஹுசைன் என்பவருடன் போதை பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து, ஞாயிற்று கிழமை அதிகாலை போதை பொருள் கட்டுப்பாடு அதிகாரிகள் நடத்திய சோதனை, இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்மை என தெரிய வரவே இருவரையும் கைது செய்தனர்.

நடிகை நைரா ஷா ஞாயிற்று கிழமை அன்று தன்னுடைய பிறந்தநாளை அந்த ஹோட்டலில் வெகு விமர்சியாக ஒரு சில நண்பர்களுடன் கொண்டாடியதாக கூறப்படுகிறது. பின்னர் காதலருடன் அறைக்கு சென்றவர் சுமார் ஒரு கிராம் காஞ்சனாவை சிகரெட் பேப்பருக்குள் சுருட்டி புகைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்.சி.பி அதிகாரிகள் ஹோட்டல் அறையில் தேடியபோது, இதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: பளீச் கலர் பாவாடை தாவணியில்... லைட்டாக இடை தெரிய போஸ் கொடுத்த ‘குக் வித் கோமாளி’ பவி போட்டோஸ்...!
 

பின்னர் கைது செய்யப்பட்ட  நடிகை நைராவும் அவரது காதலர் ஆஷிக்கும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த சோதனையில் நடிகை நைரா கஞ்சா பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி