சீரியலுக்கு வரும் அஜித் பட ஹீரோயின்..? இயக்குனர் பற்றி வெளியான முக்கிய தகவல்..!

Published : Jun 16, 2021, 03:31 PM IST
சீரியலுக்கு வரும் அஜித் பட ஹீரோயின்..? இயக்குனர் பற்றி வெளியான முக்கிய தகவல்..!

சுருக்கம்

நடிகை ராதிகா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்றோர், திருமணத்திற்கு பின், சீரியல் பக்கம் ஒதுக்கினாலும், பின்னர் அவ்வப்போது பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இவர்கள் பாணியில் தற்போது அஜித் பட ஹீரோயின் கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.   

நடிகை ராதிகா, தேவயானி, ரம்யா கிருஷ்ணன் போன்றோர், திருமணத்திற்கு பின், சீரியல் பக்கம் ஒதுக்கினாலும், பின்னர் அவ்வப்போது பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இவர்கள் பாணியில் தற்போது அஜித் பட ஹீரோயின் கனிகா சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள் : சென்னையை தொடர்ந்து ஹைதராபாத்... லைக்காவின் செயலால் உச்சகட்ட அதிர்ச்சியில் புகார் தெரிவித்த ஷங்கர்..!
 

முன்பெல்லாம் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகர் நடிகைகள், சீரியலில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். காரணம் பட வாய்ப்பு கிடைக்காதோ என்ற எண்ணத்தில்... ஆனால் தற்போதெல்லாம், சீரியலில் நடித்து பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரை படவாய்ப்புகளை கைப்பற்றி, முன்னணி நடிகர், நடிகைகளாக மாறிவிடுவது புதிய ட்ரெண்ட் ஆகி வருகிறது. எனவே பல பிரபலங்கள் தொடர்ந்து சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள் : சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து
 

அதிலும், இந்த கொரோனா லாக் டவுன் பிரச்சனை காரணமாக... திரைப்படங்கள் ரிலீசாகாமல் உள்ளதால் பலர் சீரியல்களை விரும்பி பார்க்க துவங்கி விட்டனர். எனவே சீரியலுக்கான ரசிகர்கள் கூட்டமும் பெருகி விட்டது.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, சன் டிவியில் 'கோலங்கள்' சீரியல் புகழ் திருசெல்வம் இயக்கத்தில் புதிய தொடர் வர இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இந்த சீரியலில் வரலாறு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த கனிகா தான் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இது குறித்த அதிகார பூர்வ தகவல் இதுவரை வெளியாக வில்லை. எனினும் கனிகா,  இதற்கு முன் தங்கவேட்டை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பதாலும், திருவிளையாடல் என்ற சீரியலிலும் நடித்துள்ளதாலும்... இந்த சீரியலில் அவர் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்றே கூறப்டுடுகிறது. எனவே விரைவில் இது குறித்த அதிகார பூர்வ தகவல்களை எதிர்பார்க்கலாம். 

மேலும் செய்திகள் : 'பாபநாசம் 2 ' படத்தின் கௌதமிக்கு பதில் நடிக்க உள்ளது இவரா? வெளியான தகவல்..!
 

 

 

 


.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி