சூப்பர் சிங்கர் திவ்யாவுக்கு அந்தரங்க வீடியோ அனுப்பிய மர்மநபர்... ஆதாரத்தோடு வெளியிட்ட பாடகி..!

By manimegalai a  |  First Published Jun 16, 2021, 2:04 PM IST

பிரபலமான பாடகி திவ்யாவுக்கு சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் அந்தரங்க வீடியோவை அனுப்பிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


பிரபலமான பாடகி திவ்யாவுக்கு சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர் அந்தரங்க வீடியோவை அனுப்பிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: நேற்று விஜய் சேதுபதி... இன்று தயாரிப்பாளர் தாணு! முதல்வரின் பொது நிவாரணத்திற்கு அடுத்தடுத்து உதவும் பிரபலங்கள்
 

Tap to resize

Latest Videos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பாடகி திவ்யா. இவர், தமிழில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக விஜய் நடித்த 'வில்லு' விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' ஆகிய படங்களில் இவர் பாடிய பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யாவை, மர்மநபர் ஒருவர்... விளம்பரம் ஒன்றை புரோமோட் செய்ய வேண்டும் என்பது போல் பேச்சு கொடுத்து... பின் அந்தரங்க வீடியோவை அனுப்பியுள்ளார். இதுகுறித்த ஸ்கிரீன் ஷாட்டை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பாடகி. 

மேலும் செய்திகள்: கொரோனாவிற்கு அன்பு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை... கணவருக்கு தீவிர சிகிச்சை..!
 

இதுகுறித்து அவர் கூறியதாவது: தனக்கு Zoya  Kait என்ற ஐடியில் மர்மநபர் ஒருவர் மெசேஜ் மூலம் தொடர்பு கொண்டு, பிராண்ட் ஒன்றை புரோமோஷன் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டார். ஆனால் அந்த ஐடி மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், பிராண்டின் ஐடியில் இருந்து தொடர்பு கொள்ளுமாறு கேட்டேன். ஆனால் அதற்கு அவன், ஆணின் அந்தரங்க உறுப்பு வீடியோ ஒன்றை அனுப்பி, இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா...  என கேட்டான். இதுபோன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இது குறித்து புகார் அளிக்க உள்ளதாகவும் பாடகி திவ்யா கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்:சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து
 

அந்த நபரின் ஐடியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் திவ்யா பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர், இதுபோன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். 

click me!