கொரோனாவிற்கு அன்பு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை... கணவருக்கு தீவிர சிகிச்சை..!

Published : Jun 16, 2021, 12:16 PM IST
கொரோனாவிற்கு அன்பு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை... கணவருக்கு தீவிர சிகிச்சை..!

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கவிதா. இவரது மகன், கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை கவிதா. இவரது மகன், கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது கணவரும் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்குள் நுழைந்த கொரோனா பெருத்தெற்றின் பாதிப்பால் நாளுக்கு நாள், பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாவது கொரோனா அலை பல பிரபலங்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. அந்த வகையில், காமெடி நடிகர் பாண்டு, நடிகர் நிதீஷ் வீரா, பிரபல இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி, பாடகர் கோமகன் என பலர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் பிரபல நடிகை கவிதா, தன்னுடைய அன்பு மகன் மகளை கொரோனாவால் இழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் தன்னுடைய 11 வயதில் 'ஓ மஞ்சு' என்ற திரைப்படத்தில் முதன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகி, குணச்சித்திர நடிகை என தென்னிந்திய ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் கவிதா. இவர் கடந்த சில மாதமாக கொரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்துள்ளார்.

இடையில் இவரது மகன், சஞ்சய் ரூப்பிற்கு கொரோனா அறிகுறிகள் தென்படவே தனிமையில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை தொடர்ந்து கவிதாவின் கணவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இருவருக்குமே உடல் நிலை மோசமாகி கொண்டே சென்றதால்... பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கவிதாவின் மகன் சஞ்சய் ரூப் நேற்று உயிரிழந்தார். 

நடிகை கவிதாவின் கணவர் தசரத ராஜுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த பலர், நடிகை கவிதாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். கவிதா தமிழில் 50 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'என்றென்றும் புன்னகை' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!